247 சரியில்லை என, விஷயங்களைத் திரித்துக் கூறி, விஷமப் பிரசாரம் செய்தார். விடுதலை ஏடு இவற்றையெல்லாம் தக்க முறையில் எடுத்துக் காட்டியதோடு, ஆச்சாரியார் டெல்லி அமைச்சராக இருந்தபோது, 1947-ல் சப்ளை கைத் தொழில் இலாக்காவில், 50 லட்சம் ரூபாய்க்கு ஊழல் நடந் திருந்ததையும் அம்பலப் படுத்தியது. கொலை வழக்கில் கம்யூனிஸ்டு பாலதண்டாயுதம் ஆயுள் தண்டனை பெற்றார். ஜில்லா போர்டுகளை ஒழிக்க அரசு திட்டமிட்டது. திருச்சி யில் மாணவர் கழக மாநாட்டில் கடலூர் வீரமணியும், பட்டுக்கோட்டை அழகிரி மகன் துலிப்பும் பங்கேற்றனர். பெரியார் 8-11-53 அன்று ஈரோடு சண்முகவேலாயுதம் துவக்கிய ஈரோட்டுப் பாதை என்ற தமிழ் வார ஏட்டைத் தொடங்கி வைத்தார். - - கண்ணிர்த் துளிகளின் தொடர்ச்சியான பல கிளர்ச்சி களால், பொதுமக்களுக்கு ஒரு விதமான அலுப்பும், சலிப்பும் ஏற்பட்டுவிட்டது. அவர்களுக்கு உண்மைகளை உணர்த்த வேண்டி ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படை ஒன்று புறப் உடும். 25 உறுப்பினர் கொண்ட இதற்குத் தலைவராக, சி. இலக்குவனாரும், செயலாளராக டி. வி. டேவிசும் இருப் மார்கள்” என்று பெரியார் 13-11-53 அன்று அறிவித்தார். அடுத்து, திருச்சியில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் முடிவெடுத்து, டிசம்பர் 2, 3 தேதிகளில் மதுரையிலிருந்து ஒன்றும், ஈரோட்டிலிருந்து மற்றொன்றுமாக, ஆச்சாரியார் கல்வி எதிர்ப்புப் படைகள் புறப்பட்டுச் சென்னை சென் றடையும் என்றார். திருச்சிக் குழுவுக்கு முதல் நாளே பெரியாருக்குக் கடுங் காய்ச்சல் கண்டது. 21-11-53 முதல் . ஒருவாரம் திருச்சியில் தங்கிப் பார்த்தார். ஆனைமலை நரசிம்மன் உடனிருக்க, 28-ம் நாள் சென்னைப் பொது மருத்துவ மனையில் சேர்ந்தார். அன்பர்கள் நிறைய வந்து, தந்தை பெரியாருக்குத் தொந்தரவு தரவேண்டாமென அறிக்கையும் வெளியிடப்பட்டது. கிட்னி எனும் முத்திர கோசத்தில் கோளாறு ஏற்பட்டிருந்தது. எப்படியோ, யாராலோ, 30.1153 அன்று (20 ஆண்டுகட்கு முன்னதாக)
பக்கம்:தந்தை பெரியார்.pdf/273
தோற்றம்