உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 அவையும் நீங்கினால் தனித் தமிழ்நாடுதான். அப்படி யிருக்க, இன்னும் ஆந்திரர் மலையாளிகள் தொல்லையும், பார்ப்பனர் தொல்லையும் தமிழ் நாட்டில் நீடிப்பதா? மொத்த மக்கள் தொகையில் தமிழ் நாட்டில் பார்ப்பனர் 24 சதவீதம், கிறிஸ்தவர் 100க்கு 4 பேர், முஸ்லீம்கள் 100க்குச் சுமார் 5 பேர், மலையாளிகள் 100க்குச் சுமார் 8 பேர், கன்னடத்தார் 100க்குச் சுமார் 5 பேர்; ஆகவே நூற்றுக்கு 25 பேராக உள்ள இந்தத் தமிழரல்லாத கூட்டத் தார், தமிழ் நாட்டில் சாதாரண உத்தியோகங்களில் 100க்கு 60 பேராகவும், உயர்ந்த உத்தியோகங்களில் 100க்கு 75 பேராகவும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இதில் குறிப்பாக, மலையாளிகள் தொல்லையே பெருந்தொல்லை! வகுப்புவாரி உரிமையில் இவர்களும் பார்ப்பனரல்லாதார்' என்ற பாதுகாப்பில் நுழைந்து விடுகிறார்கள்! ஆனால் இவர்கள் ஆரியக் கலாச்சாரம், ஆரிய மொழி, நடையுடை பாவனை, ஆரிய வர்ணாசிரம ஏற்பாடு இவற்றையே முழுமையும் கையாளக் கூடியவர்கள். அதனால், பார்ப் பனர்களும் தாங்களில்லாத இடங்களுக்கு இவர்களிருப் பதையே ஆதரிக்கிறார்கள். சென்னை அரசாங்கத்தின் முக்கிய பதவிகளை எடுத்துக் கொள்ளுங்கள்:- தலைமைச் செயலாளர், தலைமை எஞ்சினியர், தலைமை மருத்து வர்கள், பிரின்சிபால்கள், போலிஸ் டிப்டி கமிஷனர்கள், மாவட்டப் போலீஸ் அதிகாரிகள் இப்படி முக்கிய பத்வி களில் மலையாளிகளே வீற்றிருக்கிறார்கள். இவை ஆச்சாரி யாரின் காலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இப்படியே நீடித் தால் தமிழன் வாழ்வது எப்போது? -- o சமீப காலத்தில் திருவாங்கூர்-கொச்சி சமஸ்தானப் பகுதிகளில் தமிழர்கள் கொடுமையாக நடத்தப்பட்டிருக் கிறார்கள். இதையெல்லாம் தமிழர்கள் நல்ல வண்ணம் , யோசித்துக், கட்டுப்பாடான கிளர்ச்சி செய்வதன் மூலம் பரிகாரம் பெற வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். இதுவே எனது 76-ஆவது பிறந்த நாள் செய்தி' என்று பெரியார், 17-9-54 'விடுதலை ஏட்டில் அறிக்கை வெள்