உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 நிலையில் நின்றார். அமைதியான சூழ்நிலையில் தமிழகத் தைக் கட்டிக்காத்து வந்த பெரியாரைத் தூண்டி விட்டது. ஆணவ ஆட்சி. சென்ற ஆண்டே எச்சரித்ததுபோல், இனி இந்தி எழுத்துகளை அழிப்பதோடு நிறுத்தமாட்டோம்; தீவிரமான முயற்சியில் இறங்குவ்ோம் என்று கருத்தறிவித்த தற்கிணங்கத், திருச்சியில், 17-7-1955 அன்று நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக்குழு, ஆகஸ்டு 1ஆம் நாள் இந்தி எதிர்ப்பின் அறிகுறியாய், இந்தியத் தேசிய்க் கொடியைக் கொளுத்துவோம் என முடிவு செய்துவிட்டது! 20:7-55 விடுதலை’ நாளேட்டில் கொடி கொளுத்தும் தீர்மானம்' என்பது பற்றிப் பெரியார் தலையங்கப் பகுதி. யில் விளக்கமளித்திருந்தார். . . குமரன் காத்த கொடியைக் கொளுத்தலாமா என்கின்றார்கள் நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகள் உலகத்தில் அறிவாளிகள் பிறக்குமிடம், கம்யூனிஸ்ட் கட்சிதான். என்கிறார்கள். நம் நாட்டுக் கம்யூனிஸ்டுகளைப் பொறுத்த மட்டிலும் அது அத்தனையும் பொய்யாகி விட்டது. குமரன் காத்த கொடி இதுவல்ல காங்கிரஸ் கட்சி தோன்றிய நாட்களாய், எத்தனை முறை கொடியில் மாற். றங்கள் செய்யப்பட்டன என்பது, இவர்களைவிட எனக்குத் தான் நன்றாகத் தெரியும் கடைசியாக இருந்த கட்சிக் கொடியின் அமைப்பில், ராட்டைக்குப் பதில் அசோக, சக்கரத்தைப் பொறித்து, மத்தியில் வைத்து, இதுதான் அரசாங்கக் கொடி, தேசியக் கொடி என்கிறார்கள். நாம் கொளுத்தப்போவது சர்க்காரின் கொடியைத்தான்' என்று பெரியார் விளக்கினார். இதற்காக ஜூலை 22 முதல் 31 வரை ஊரூராக இரயிலில் பிரயாணம் செய்து, தோழர்களை நேரில் சந்தித்து, உற்சாகமளித்து வந்தார். எல்லா ஊர். களிலும் யார் யார் எந்தெந்த இடத்தில் கொடி கொளுத்து வார்கள் என்பது வெளிப்படையாக, விவரத்துடன், எப்போதும் போல் திராவிடர் கழகத்தால் முன்னதாகவே வெளியிடப்பட்டு வந்தது. பத்தாயிரம் தோழர்கள் இந்தப் பட்டியலில் இடம் பெற்றனர். ஆண்டாண்டு வெளியாகும்.