உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 தீபாவளி கொண்டாடாத தீரர்கள் பட்டியலைக் காட்டிலும் இது நீண்டிருந்தது. கடந்த 1952, 1953 ஆண்டுகளில் ராஜாஜி யும், 1954-ஆம் ஆண்டில் காமராசரும் முதல்வர்களாக வீற்றிருந்தபோது, இந்தி எழுத்து அழிக்கும் போராட்ட வீரர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளாமல் விட்டுவந் தார்கள். மற்றவர்கள் கேட்டபோது, தார். கொண்டு அழித்ததை மண்ணெண்ணெய் கொண்டு துடைத்தால் சீக்கிரமாகவும் சிக்கனமாகவும் விவகாரம் முடிந்து விடும்; ஆனால், நடவடிக்கை எடுத்தால் விரயமும் விபரீதமும் ஏற்படும் என்று ஆட்சியாளர் சமாதானம் கூறி வந்தனர். 1955 கொடி கொளுத்தும் போராட்டம் பதற்ற நிலை யைத் தோற்றுவித்திருந்தது. என்ன நேருமோ என்ற கவலை மக்கள் முகத்தில் தோய்ந்திருந்தது. எது நேரினும் சரியே. என்ற உறுதி கருஞ் சட்டையினர் முகத்தில் பொலிந்தது. இந்தச் சூழலில்தான் காமராசர் 30-7-1955 அன்றே, தேர்வுகளில், இந்தி கட்டாயப் பாடமாக இருக்காது. மத்திய அரசின் சார்பிலும், மாநில அரசின் சார்பிலும் இந்தி எப்போதும், எப்படியும் திணிக்கப்படமாட்டாது என நான் உறுதி கூறுகிறேன். இந்த என் உறுதி மொழியை நம்பித் திராவிடர் கழகத்தினர் தேசியக் கொடி கொளுத்தும் போராட்டத்தைக் கைவிடவேண்டும். மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கத் தயங்க மாட்டேன் என்று தமிழகத்து முதலமைச்சரான காமராசர் தெளிவாகக் குறிப்பிட் டார். குருடனுக்கு வேண்டியது கண்தானே? பின்னர், ரயில் நிலையைப் பலகைகளில் தமிழ் எழுத்து பெரி தாக மேலே எழுதப்பட்டு விட்டது. இது பெரியார்க்கு வெற்றிதானே ? தண்டவாளங்களைப் பெயர்ப்பதால் வெள்ளையனை விரட்ட முடியுமென நினைத்தவர்கள் ஆட்சியில், தேசியக் கொடியைக் கொளுத்துவதால் இந்தியை விரட்ட முடியு. மென நினைப்பது தவறா? காமராசரின் உறுதிமொழியைப் பெரிதும் நம்பி, இது இப்போதைக்குப் போதும்; எனவே r பெ.-18 * -