உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 தனர். சென்னையிலும் ஊர்வலத்துக்கும் பொதுக் கூட்டத் துக்கும் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பெரியார் :விடுதலை"யில் தொடர்ந்து எழுதி, விளக்கி வந்தார். பெரியாரிடம் பேரன்பு பூண்ட டாக்டர் வரதராசலு நாயுடு, குன்றக்குடி அடிகளார் இருவருமே இராமன் பட எரிப்புக் கிளர்ச்சியைக் கைவிடுமாறு கோரினர். பெரியார் அமைதியுடன் அவர்களிருவருக்கும்-அதன் மூலம் தெளி வில்லாத நெஞ்சங்களுக்கும் - தெளிவுரை புகன்றார். இராமன் அவதாரமல்ல; சாதாரண மனிதன்தான் என்று, ராஜாஜி, சங்கராச்சாரியார், வால்மீகி, டி. கே சி., மறை மலையடிகள், திரு. வி. க., காந்தியார் போன்ற அறிஞர்கள் கூறியுள்ளதை மேற்கோள் காட்டினார். 'இராமன் படத்தை எரிக்கக்கூடாது என்பதற்கு எதிர்ப்புத் தெரிவிப்போர், வாத முறையில் ஏதும் கூறவில்லையே! என்னிடத்தில் உள்ள அன்பினால், உரிமையால், கேட்டுக் கொள்ளுகிறார்கள். இந்த இராமனோ, அல்லது பிற இந்துக் கடவுள்களோ எரிக்கப்பட வேண்டும், அல்லது உடைக்கப்பட வேண்டும் என்பதற்கு, நான் எடுத்துக் காட்டுகின்ற ஆதாரக் காரணங் களை மறுத்துவிட்டுப், பிறகு எரிக்க வேண்டாம், உடைக்க வேண்டாம் என்று கட்டளையிடட்டும்!நான் ஏற்றுக் கொள் கிறேன்! நான் தவறே செய்யலாம்; ஆனால் என்னைக் குறை கூறுவதனாலோ, தண்டிப்பதனாலோ என்னைத் திருத்துவதாகுமா? எனக்குக் கெட்ட பெயர் வருவது பற்றியோ, தண்டனை கிடைப்பது பற்றியோ, என் ஆவி பிரிவது பற்றியோ நான் சிறிதாவது இலட்சியம் செய்வதாயிருந்தால் இந்தக் காரியத்தில் பிரவேசித்து இருக்கமாட்டேன். என் வாழ்நாளில், தமிழர்களுக்கு நீண்ட நாட்களாக இருந்து வருகின்ற காட்டுமிராண்டித்தன்மையான கடவுள்-சமயப் பற்றும், இழிவுத் தன்மையும் கடுகளவு குறைந்தாலும், நான் வெற்றிபெற்றவனாவேன்! மன்னித்தருள்க!' என்றார். பெரியாரையும் குருசாமியையும் எதிர்பாராத விதமாக 1.ந்தேதி காலையே கைது செய்து வைத்திருந்து, பெட்டி