309 திரும்பிப் பத்திரமாகத் தன் ஊருக்குப் பறந்து சென்றிருக் கிறார், 8000 போலீஸ் காவலுடன், இந்தியாவின் முதல் மந்திரியாயிருக்கும், பார்ப்பனப் புரோகித சாதியைச் சேர்ந்த, பண்டித ஜவகர்லால் நேரு இது, தோலைக் கடித்துத் துருத்தியைக் கடித்து, ஆட்டைக் கடித்து மாட்டைக் கடித்துக், கடைசியில் மனிதனையே கடிக்க வந்துவிட்டது-என்னும் பழமொழி போல இருக்கிறது! இந்த பனியா-பார்ப்பன ஆட்சி ஏற்பட்ட பின், தமிழர்கள் சிறைக் கைதிகள் போல்தான் இருக்கிறோம்! அங்குள்ள கான் விக்ட் வார்டர் போலத் தமிழ்ச் சேவகர்கள், தமிழ் அதிகாரிகள் இருக்கிறார்கள். தமிழர்கள் மந்திரி களாக வந்தாலும், அதே கான்விக்ட் வார்டர் நிலைதான்! தமிழ் மக்களே! இந்தச் சந்தர்ப்பத்தில் நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்? உங்களுடைய கடமை என்ன? அரசியல் சட்டம் ஏன், யாருக்காகக் கொளுத்தப்பட்டது? நான் உட்பட 3000 பேர் எதற்காகச் சிறை பிடிக்கப் பட்டோம்? - - பார்ப்பனர்களைக் குத்தியதற்கா? கொன்றதற்கா? பார்ப்பனச் சேரியில் நெருப்பு வைத்துக் கொளுத்திய தற்கா? பார்ப்பனப் பெண்களை இம்சித்ததற்கா? இல்லை. இல்லவேயில்லை! மற்றவர்கள் இதற்காகச் சிறையில் இல்லை என் ஒருவன் மீதுதான் குத்தச் சொன்னதாகவும், கொல்லச் சொன்னதாகவும், கொளுத்தச் சொன்னதாகவும் வழக்குப் போட்டிருக்கிறார்கள்; அதுவும் வெள்ளரிப் பழத் திற்குப் பூண்போட்டுக் கெட்டிப் படுத்துவது போன்ற குற்றம்தான் சாட்டப்பட்டிருக்கிறது. - சாதி காப்பாற்றப்படும் சட்டம்எங்களுக்கு வேண்டாம்; அதைத் திருத்து என்பதற்கு அறிகுறியாக, அறிக்கையெல் லாம் வெளியிட்டு, ஒரு துண்டுக் காகிதத்தைக் கொளுத்து வதன் மூலம் அறிவுறுத்திக் காட்டினோம். அதற்காகக் குழந்தைகள், குஞ்சுகள், பெண்கள், வயோதிகர்கள், கர்ப்பிணிகள், இளைஞர்கள் உட்படப் பத்தாயிரம் பேர் கொளுத்தியதில், 7000 பேரை விட்டுவிட்டு, 3000 பேரைச்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/335
தோற்றம்