315 9.12.1957 அன்றுதான் பிரதமர் நேரு திருச்சியில் பெரி யாரை, மிகத் தரக்குறைவாகவும், தமது தகுதி பதவிகளுக்கு இழிவு நேரும் வகையிலும், இழித்தும் பழித்தும் பேசினார். அவர் மீண்டும் 1958 ஜனவரி 6-சென்னை வருவதாகத் திட்ட மிட்டார். திராவிட முன்னேற்றக் கழகம் 29.12-57ல் தனது நாகர்கோயில் பொதுக் குழுவில் தீர்மானித்தபடிப், பெரி யாரை இழிவாகப் பேசிய நேருவுக்கு, பிரம்மாண்ட அளவில் கருப்புக்கொடி காட்டித் தமிழ்மக்கள் ஏகோபித்த எதிர்ப். பினைத் தெரிவிக்க வேண்டுமெனத் திட்டமிடப்பட்டது. சிறையிலிருந்தவாறே பெரியார், அநாவசியக் குழப்பங். களைத் தவிர்க்கவேண்டி, இந்த முறை திராவிடர் கழகம் நேருவுக்குக் கருப்புக்கொடி காட்ட வேண்டாம் என்று. தெரிவித்து விட்டார். சட்ட மன்றம் நடந்து கொண் டிருந்தது. காமாராசர் முதல்வராயிருந்ததால், எப்படி யாவது கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தைத் தவிர்த்திடப் பல வழிமுறைகளைக் கையாண்டார். 'சண்டே அப்சர்வர்' பி. பாலசுப்ரமணியம் பகடைக் காயாகப் பயன்பட்டார். கருப்புக்கொடி வேண்டாம், அல்லது ஒரு இடத்தில் மட்டும் பிடிக்கலாமே-என்று இவர் அண்ணாவிடம் பேசினார், அண்ணா இணங்க மறுத்தார். பெரியாரிடம் தவறான தகவல்-அதாவது அண்ணாவே பயந்து கொண்டு பின் வாங்குவதாகச் செய்தி-திரித்துக் கூறப்பட்டது! கருப்புக் கொடி பிடிக்க அனுமதி தரப்பட்டுள்ளதாகச் சட்டமன்றத். தில் உள்துறை அமைச்சர் பக்தவச்சலம் கூறினார். ஆனால் நடந்தது வேறு 4-1-1958 மாலை அண்ணா, கலைஞர் ஆகிய முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். தி.மு. கழகத்தின் எம்.எல்.ஏ. 14 பேரும், எம்.பி. 2 பேரும் சிறைப்பட்டனர், நடிகர்களும் கைதாயினர். எனினும் மீனம்பாக்கத்திலிருந்து மவுண்ட்ரோடு வரை 61.58 அன்று. நேரு கருங்கொடிக் காடு கண்டு, பாதை மாற்றிச் செல்ல நேரிட்டது! - . - . பெரியாருக்குச் சிறையில் அஜிர்ணமும், பல தொல்லை. களும் ஏற்பட்டன. 5-1-58 அன்று சென்னைப் பொது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/341
தோற்றம்