3.19. கடாக்டர் மா. ராசமாணிக்கனார், டி.வி. சொக்கப்பா, பட்டுக்கோட்டை வழக்கறிஞர் எம். எஸ். கிருஷ்ணசாமி, பாவலர் பாலசுந்தரம், பாரதிதாசன் எம்.எல்.ஏ., வீர. கே, சின்னப்பன், வீரமணி, மணியம்மையார், எஸ். ராமநாதன், .ச.சோ. பாரதியார் போன்றார் பங்கேற்று நடத்தினர். நாம் தமிழர் இயக்கம், இலங்கையில் தமிழர் வாழும் பகுதியும் சேர்ந்த தனித் தமிழ் நாடு கோரியது. இது அபத்தம் என்று கண்டித்தார் பண்டிதநேரு. தாம் பதவி விலகப் போவதாக ஒர் அதிர்ச்சி வைத்தியம் செய்தார். "இவர் விலகமாட்டார்; பிரதமராகத்தான் சாவார் என்று "விடுதலை' அறுதியிட்டுக் கூறியது. அவ்வாறே, பின்னர், :சிலநாள் ஒய்வெடுக்கப் போகிறேன் என்று ஸ்டண்ட் செய்து விட்டார் நேரு, மொரார்ஜி தேசாய் டி.டி.கே. இடத்தில் நிதியமைச்சராக்கப்பட்டார். - - 1958 மே 7-ஆம் நாள் மணியம்மையார் மீதும், தஞ்சை நெடுமாறன் மீதும் 153-A பிரிவுப்படி ஒரு வழக்குத் :தொடர்ந்தது அரசு; இளந்தமிழா புறப்படு போருக்குஎன்ற கட்டுரையை வெளியிட்டதற்கும், எழுதியதற்கும்! பெரியாருக்கு மருத்துவமனையிலும் நல்லசுரம் கண்டிருந்தது. அப்படியும் அவர் தினந்தோறும், எப்போது ஜெயிலுக்குள் போவது?’ என்று கேட்ட வண்ணம் இருந்தார். தேவிகுளம் இடைத்தேர்தலில் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வென்றார்: காங்கிரஸ், கண்ணிர்த்துளி வேட்பாளர்கள் தோற்றனர். தூத்துக்குடி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வென்று: கம்யூனிஸ்ட், கண்ணிர்த்துளி தோற்றன. பி .பாலசுப்ர மணியம் 22-5-58 அன்று மறைந்தபோது, பெரியார் தமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். "கூண்டுக்குள் சிங்கம். இன்று 156-வது நாள், இன்னும் எத்தனை நாள்?’ என்று 18-5-58 தேதிவரை விடுதலை: வெளியிட்டது, ஆனால் 19-5-58 விடுதலை’ கூண்டுக்குள் .சிங்கம். இன்னும் 25 நாட்களே' என்று முடிவாகச் செய்தி .பிரசுரித்தது. 1958 ஜூன் 13-ஆம் நாள், பெரியார், காலை 110 மணியளவில் விடுதலை செய்யப் பட்டார். பொது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/345
தோற்றம்