320 மருத்துவ மனையிலிருந்து சக்கர நாற்காலியில் அமர்ந்து, நகர்ந்து, வெளியில் வந்ததும், பல்லாயிரக்கணக்கான மக்கள் குழுமி, வரவேற்று, மகிழ்ச்சிப் பெருக்கால் மலைபோல் குவித்தனர் மலர் மாலைகளை. பெரியார் நேரே மத்தியசிறை. சென்று, பின்னரே இல்லம் திரும்பினார். அன்று மாலை, யானைமேல் அம்பாரிபோல் அலங்கரிக்கப்பட்ட அழகுமிகு தேரில் பெரியார் அமர்த்தப்பட்டு, 4 மைல் நீள ஊர்வலம், எம். ஆர். ராதா தலைமையில் நடைபெற்றது. மாவட்டக் கழகத் தோழர்களான எம்.கே.டி. சுப்ரமணியம், எம்.எஸ். மணி ஆகியோர் முன்னின்று நடத்தினர். "நான் வெளியே வந்துவிட்டேன். நாலாயிரம் பேரில் இன்னும் 1500 பேர் சிறைச்சாலையில்தான் கொடுமை அனுபவிக்கிறார்கள்” என்றார் பெரியார். ஆறுமாத ஓய்வுக்கு விடைகொடுத்து, அடுத்தநாளே சுற்றுப்பிரயாணம் தொடங்கினார் பெரியார். மே 14 திருச்சி, 15 குடந்தை, 16 தஞ்சை, 17 திருவாரூர், 18 திருச்சி, 19 ஈரோடு, 20 சேலம், 22 மதுரை, 23 விருதுநகர், 24 பெரிய குளம், 25 தேனி, 26 காரைக்கால், 29 சிதம்பரம், ஜூன் 1 சின்னசேலம், 2 கடலூர், 3 சிதம்பரம், 5-6 மன்னார் குடியில் சாதி ஒழிப்பு, சுதந்தரத் தமிழ்நாடு மாநாடுகள். இங்குதான் பெரியார் அறிவித்தார், 'சாதி ஒழிப்புக்கு நாடு பிரிவினையே முன்னணித் திட்டம். தமிழக விடுதலையை வற்புறுத்தத் தமிழ்நாடு நீங்கலாக உள்ள இந்திய யூனியன் படத்தை எரிக்கப்படும் என்பதை. 17-58-ல் சென்னைத் துறைமுகத்தில் நடந்த துப்பாக்கிப் பிரயோகத்தில் 6 பேர் உயிரிழந்தனர். உடனே பகிரங்க விசாரணை நடத்த வேண்டும் என்று கோரப் பட்டது. பழைய நாள் தொழிற்சங்கத் தலைவரும், பெரியாரின் நண்பருமான சர்க்கரைச் செட்டியார் 14-6-58. அன்றும், சிறந்த மருத்துவமேதையும் வள்ளலுமான டாக்டர் குருசாமி முதலியார் 27-6-58 அன்றும், மறைந்தனர். சிறைக் கோட்டத்திலிருந்து குத்துளசி குருசாமி, ஏ.பி. சனார்த்தனம், ஆனைமலை நரசிம்மன் ஆகியோர் விடுதலை பெற்றனர். புரட்சிக்கவிஞரின் 'குயில் உரிமைக் குரலெழுப்பிப் பாடிப்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/346
தோற்றம்