325 மாநாடு 11-1-59ல் நடந்தது. ஜெனரல் கரியப்பா, நீதிபதி மேடப்பா போன்றோர் கலந்துகொண்டனர். பெரியார் சிறப்புரையாற்றுகையில் 'இந்த மாநாட்டில், வேண்டு கோள் தீர்மானங்களே நிறைவேற்ற வேண்டாம். இனி நேரடி நடவடிக்கைதான் தேவை. இந்தி எப்போதுமே வேண்டாம்! இங்கிலிஷே நீடிக்கத் திட்டம் வேண்டும்!" என்றார். - தி. பொ. வேதாசலத்தின் 62-ஆவது பிறந்த நாள் 1959 சனவரி 20-ஆம் நாளாகும். அன்று பெரியார், கழகத் தோழர்கள் சிலருடைய நடவடிக்கைகளில் அதிருப்தி தெரி வித்து, மன வருத்தமுற்று, ஒர் அறிக்கை முன்னெச்சரிக்கை யாக வெளியிட்டார். அடுத்து, 30-1-59 அன்று வெளியான பெரியாரின் ஒழுங்கு நடவடிக்கை, மிகக்கடுமையாயிருந்தது. சார்பு மன்றங்கள் சுயமரியாதைச் சங்கங்கள் அனைத்தை யுமே கலைத்தார். எஸ். குருசாமி, டி. எம். சண்முகம், லோகநாதன், எம். கே. டி. சுப்பிரமணியம், எம். ஆர். ராதா ஆகியோர் கழகக் கூட்டங்களில் தற்காலிகமாகக் கலந்து கொள்ளக்கூடாது என்றும் தடை போட்டார். 1-2-1959 அன்று பெரியார் கார் மூலமாகச் சுமார் 4000 மைல் நீளச் சுற்றுப்பயணம் ஒன்று மேற்கொண்டார். மணியம்மையார், ஆனைமலை ராமகிருஷ்ணம்மாள், ஏ.என். நரசிம்மன், கி. வீரமணி, புலவர் கோ. இமயவரம்பன் ஆகியோரும் பெரியாருடன் புறப்பட்டனர். சிகந்தராபாத், ஜான்சி, நாகபுரி, ஜப்பல்பூர்வழியே கான்பூர் சென்றார்கள். கான்பூரில் பெரியார் 2 மணிநேரம் பிற்படுத்தப் பட்டோர் பிரச்சினை குறித்து ஆங்கிலத்திலேயே உரையாற்றினார். பின்னர் லட்சுமணபுரி பல்கலைக்கழக யூனியனில் சொற் பொழிவு. 12-ந் தேதி டெல்லி பயணமானார். அங்கு ரிபப்ளிகன் கட்சியாரின் கூட்டத்திலும், தமிழர்கள் கூட்டத் திலும் பெரியார் பேசினார். 17-ந் தேதி அங்கிருந்து கிளம்பி பம்பாய்க்கு 20-ந்தேதி சென்றடைந்தார். அங்கும் மாபெரும் வரவேற்பு; கொள்கை முழக்கம்! 25-2.59 அன்று பம்பாய் விட்டுக் கிளம்பி, 28-2-59 சென்னை வந்து சேர்ந்தார்கள்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/351
தோற்றம்