326 பெரியார் குழுவினர். வெற்றிகரமான இந்த வடநாட்டுச். சுற்றுப் பயணத்தைக் கொண்டாடச் சென்னை வாழ் பெரு மக்கள் 1-3-59 அன்று ஊர்வலத்தில் ஒரு லட்சம் பேரும், மெரினாப் பொதுக் கூட்டத்தில் 2 லட்சம் பேருமாகத் திரண்டு, பெரியாரை வாழ்த்தினர். பம்பாயிலிருந்தபோது, 'கரண்ட்’ நிருபர் பி. ஜே. பெர்னாண்டஸ் பெரியாரைப் பேட்டி,கண்ட விவரம் 4-3-59 கரண்ட்’ இதழில் சிறப்பாக வும், எடுப்பாகவும் வெளியிடப்பட்டிருந்தது. 8-3-59 'கல்கண்டு' இதழும், பெரியார் எல்லா மொழியிலுமே பேசுகிறார் என்று பெருமிதத்தோடு கூறியது. வடபுலத்து ஆங்கில ஏடுகளான ஸ்டேட்ஸ்மன், அட்வான்ஸ், பயனர், நேஷனல் ஹெரால்டு, மற்றும் உருதுமொழி ஏடுகளான சியாசத், அல்ஜமயத் ஆகியவை பெரியாரின் பேச்சு, கொள்கை, போராட்டம் பற்றி விளக்கமான செய்திச் சித்திரங்கள் வெளியிட்டுச் சிறப்பித்தன. - தஞ்சை மாவட்டம் குத்தாலம் பகுதியில் வசதி யான குடும்பத்தைச் சார்ந்த கோ. இமயவரம்பன், புலவர் பட்டம் பெற்றதும், நேரே பெரியாரிடம் சென்று, தன்னை அவர் தொண்டராகப் பிணைத்துக் கொண்டவர், திருமணமே செய்துகொள்ளாமல், முழு நேரப் பணிக்கு அர்ப்பணித்துக் கொண்டவர், நிழல் போல் பெரியாரைத் தொடர்ந்தவர், அவருக்குப் பின் னரும் இயக்க இணைப்பைக் கைவிடாதுள்ளவர். இன்று திருச்சியிலுள்ள பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனக் கல்விச்சாலைகள் அனைத்துக்கும் தாளாளர். அரசியல் சட்ட எரிப்புப் போரின் 13-வது பலியாக கண்டராதித்தம் சிங்காரவேலு மார்ச் 23-ல், 14-வது பலியாக - சென்னை கந்தசாமி மார்ச் 24-ல், 15-வது பலியாக திருச்சி டி. ஆர். எஸ். வாசன் ஏப்ரல் 25-ல் - மரணமடைந்தனர். சேலத்தில் நீண்ட நாளையக் கழக அன்பர் கே. ஜெகதீசன் 20.3.59அன்று இயற்கை எய்தினார்.எல்லாத் துயரங்களையும். பெரியார் தாங்கிக்கொண்டார். திருச்சி சிறைச்சாலையில் இன்னும் தண்டனை அனுபவித்து வந்த தொண்டர்களை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/352
தோற்றம்