331 காலமானார். 20-12-59 அன்று வேதாரணியம் சென்றி ருந்த பெரியாரை,சர்தார் வேதரத்தினம்பிள்ளை எம்.எல்.ஏ. வரவேற்றுப் பாராட்டிப் போற்றிப் புகழ்ந்து, தம் கன்னியா குருகுலத்தைச் சுற்றிக் காட்டினார். பெரியார் வாழ்க்கையில் முதல் தவறு என்று அவரே குறிப்பிட்ட நிகழ்ச்சி ஒன்று 29-11-59 அன்று நடந்துவிட்டது 28-ம் நாள் பெரியார் சேலம் மாவட்டம் ஆத்தூரில் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு விட்டுத், தமது காரில் காஞ்சிபுரம் புறப் பட்டார். காஞ்சியில் மாபெரும் நிதியளிப்புப் பொதுக் கூட்டம். வழியில் பலத்த மழை. கார் பழுதாகி நகர மறுக்கிறது. எவ்வளவு முயன்றாலும் காஞ்சிக் கூட்டத். துக்குப் போய்ச் சேர வழியில்லை. வேறு நிலைமை சரி யாகத் தோன்றாததால் பெரியார், கிடைத்த பேருந்து ஒன்றைப் பிடித்து, எப்படியோ திருச்சி போய்ச் சேர்ந்தார். இப்படி, ஒத்துக்கொண்ட பொதுக் கூட்ட நிகழ்ச்சிக்குப் போய்ச் சேர முடியாமல் போனதையே, பெரியார், முதல் தவறு என்று விடுதலை'யில் குறிப்பிட்டு, வருத்தமும் தெரிவித்து, மறு திங்களில் வேறு நாளில் காஞ்சி சென்று, அக்குறையை நிறைவு செய்துவிட்டார். 1960 சனவரித் திங்களிலும் நாடெங்கும் நிதியளிப்புக் கூட்டங்களில் பெரியார் பெரிதும் கலந்து கொண்டார். சனவரி 16-ஆம் நாள் தஞ்சை மாவட்டத்தில் பேசும்போது, "தஞ்சை மாவட்டம் புத்தரின் அறிவொளி பரவிய மய்யம் ஆயிற்றே; புத்தக் கொள்கைகளை ஒழித்து இவ்வளவு' கோயில்களை இங்கு எழுப்பிவிட்டார்களே; இங்குள்ள பணக்கார மடையரும் பார்ப்பான் காலைக் கழுவித் தீர்த்த மென்று குடிக்கின்றார்களே' என்று பெரியார் வேதனைப் பட்டார். கும்பகோணத்தில் 30-ம் நாள், பொதுக் கூட்டத்தில் பேசும்போது, பார்ப்பனர் நிலை மேலும் சரி யாமல் முட்டுக்கொடுத்துக் காப்பாற்றத்தான் ஆச்சாரியார் இப்போது சுதந்திரக் கட்சியைத் தோற்றுவித்திருக்கிறார் என்பதைச் சுட்டிக் காட்டினார் பெரியார். துரத்துக்குடி, இடைத் தேர்தலில் காமராசரின் கட்சியையே ஆதரிக்க
பக்கம்:தந்தை பெரியார்.pdf/357
தோற்றம்