உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

340 செப்டம்பர் 17-ஆம் நாள் பெரியார் 82-வது பிறந்த நாள் விழா; சிதம்பரத்தில் அதே நாளில் டாக்டர் ஆர். ஜி. கிருஷ்ணன் தலைமையில் வழக்கறிஞர் ரங்கசாமி முதலியோர் பங்கேற்றனர். திருச்சியில் அடுத்த நாள் டாக்டர் மணவாளராமானுஜம் தலைமையில் டி. ஏ. வி. நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர். இரு ஊர்களிலும் பெரியாரும் பங்கேற்றார். 17.9.60 தஞ்சையில் பெரியார் படத்திறப்பு விழாவில் எம். ஆர். ராதாவுடன் ஆர். எஸ். மலையப்பன் (ஒய்வு பெற்ற அய். ஏ. எஸ்.) பங்கு பெற்றார். 29.9-50 மணப்பாறையில் பெரியார், கலைவாண்ர் படிப்ப கத்தைத் திறந்து வைத்தார். 25-9-60 ஈரோட்டில் எம். ஜி. அங்கப்ப செட்டியார் தலைமையில் பெரியாரின் எடைக்குச் சரியாகப் பேரீச்சம்பழம் வழங்கப்பட்டது. 30-9.60 சேலத் தில் பி. ரத்தினசாமிப்பிள்ளை தலைமையில் பெரியாரைத் தராசிலிட்டுச் சம எடைக்குக் கைத்தறி ஆடைகளை வழங் கினார்கள். 28-10-60 மாயூரத்தில் 82 பொற்காசுகளாலான தங்க மாலை பரிசளித்தார்கள். • சிறப்பான ஒரு கூட்டத்தைச் சென்னை நகர மக்கள் சார்பில் திருச்செங்கோடு கே. பரமசிவம் நடத்திக் காட்டினார். 20.10-1960 அன்று சென்னை கோகலே ஹாலில் பெரியாரின் 82-ஆவது பிறந்த நாள் கொண் டாட்டம். நிகழ்ச்சியின் தலைவர் செட்டி நாட்டரசர். சிறப்புரையாற்றியவர்கள் டாக்டர் எஸ். ஜி. மணவாள ராமானுஜம், வி. ஆர். ராஜரத்னம் (ஒய்வு பெற்ற அய். ஜி.) சி. பா. ஆதித்தனார், பி. பரமேசுவரன் எம். பி., டி. ஏ. வி. நாதன், ஏ. வி. பி. ஆசைத்தம்பி எம். எல். ஏ., எம். எஸ். அப்துல் மஜீத், புத்த பிக்கு நந்தீசுவரதேரோ, தமிழ் வாணன், அகல்யா சந்தானம். பேருரை நிகழ்த்தியவர் சக்கரவர்த்தி ராசகோபாலாச்சாரியார். பெரியாரும் இந்த விழாவில் கலந்து கொள்வாரென நம்பி அவரும் வந்தாராம். வராததால் ஏமாற்றமடைந்தாராம். நீண்ட நேரம் ராஜாஜி மனம்விட்டுப் பேசினார்:- - -