343 சமூகக் குறையையும், வாழ்க்கை முறையையும், சரிநிலை, சரிபங்கு அடைய முடியாத தடைகளையும் ஒழிப்பதன் மூலமே சாதிக் கேட்டை ஒரு பெரும் அளவு ஒழிக்க முடியும். இதற்கு அரசு மூலமாக நடைபெற வேண்டிய காரியங்கள் இரண்டே இரண்டுதான் உண்டு. ஒன்று, இரண்டுசாதி மக்களுக்கும் சரி சமத்துவ விகிதத்தில் எல்லாப் படிப்பும் கிடைக்கும்படிச் செய்தல்; இரண்டு, இரண்டுசாதி மக்களுக் கும் உத்தியோகம் பதவி ஆட்சித் தலைமை ஆகியவற்றில் ஜனத்தொகை எண்ணிக்கைக்கேற்ற விகிதப்படி, சாதிவாரி உரிமையளித்து அந்தப்படி அந்தந்தச் சாதியை அமர்த்துதல். இந்த இரண்டு காரியமும் செய்வதற்குச் சட்டசபைக்கோ நாடாளுமன்றத்துக்கோ செல்வதால் சாதிக்கக் கூடியதாகி விடாது. ஏன்? ஆட்சி இந்தக் காரியங்களைச் செய்யக் கூடாது என்று அரசியல் சட்டம் தடுப்பதில்லை; செய் என்று நிர்ப்பந்தப்படுத்த இயலாதபடி மட்டுமே அந்தச் சட்டம் அமைக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, ஒரு பார்ப்பான் தானே தனது உச்சிக் குடுமி, பூணுாலை எடுப்பதில் அவனுக்கு எவ்விதத் தடையுமில்லை. ஆனால் சாதித் திமிரைக் காட்டும் அவனது உச்சிக் குடுமியைக் கத்தரித்து விடு என்றோ பூணுாலை அறுத்து எறிந்து விடு என்றோ சொல்ல நமக்கு அதிகாரம் கிடையாது. ஆகவே இக்காரியங்கள் செய்யப் படுவதற்குக் கிளர்ச்சிகள்தான் தேவை; சட்டசபை, பார்லி மெண்டு செல்வது தேவையில்லை. சட்டத்தால் சாதியை ஒழிக்க முடியாது என்பது இன்று நிலைமை’-என்று பெரியார் பேசினார், எழுதினார். 1961-ஆம் ஆண்டின் துவக்க நாளிலேயே பெரியார் தமது புத்தாண்டுக் கோரிக்கை போலத் திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில் ஒன்று ஆசைப்பட்டார். அதாவது தமிழன் உருப்பட வேண்டுமானால் காமராசர் ஆட்சி மேலும் பத் தாண்டுகளுக்கு நீடிக்க வேண்டுமென்றார். பார்ப்பனப் பத்திரிகைகள் மறைமுகமாகக் காமராசர் ஆட்சிக்குத் தொல்லை தருவதைப் பொறுக்க முடியாமல் திருச்சியில் இதற்காகவே 9-1.61 அன்று ஒரு கண்டனப் பொதுக்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/369
தோற்றம்