உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

345 தஞ்சை வட்டம் சித்திரக்குடி, பகுத்தறிவுப்புலவர் ந. இராமநாதன் கரந்தை, காரைக்குடித் தமிழ்க் கல்லூரிகளில் முதல்வராகப் பணியாற்றியவர். "பெரியார் பேருரையாளர்' எனும் சிறப்புமிகு பட்டத் துடன் திராவிடர் கழகத்தின் ஆற்றல்மிகு ஆராய்ச்சிப் பேச்சாளராக முன்னணியில் விளங்குகின்றவர். :தமிழர் தலைவர்' என்ற ஈடற்ற நூலின் வரலாற்றாசான் தமிழ்ப் பெரும் புலவர் சாமி சிதம்பரனார் 17-1-1961 இரவு 10.30 மணியளவில் தமது 61-ஆவது, வயதில் சென்னையில் மறைந்தார். நாரணதுரைக்கண்ணன், முகவை ராசமாணிக்கம் போன்றாரும் இடுகாட்டில் இரங்கலுரை பகர்ந்தனர். சனவரி, பிப்ரவரி மாதச் சுற்றுப் பயணங்களில் பெரியாருடன், பொதுச் செயலாளர் ஏ. என். நரசிம்மன் பி.ஏ. கலந்துகொண்டார். பெரியார் திருவெற்றி யூரில் சொற்பெருக்காற்றுகையில் கண்ணிர்த்துளிகளைக் கண்டித்தார். பெயரில் மாத்திரம் முன்னேற்றம் என்று இருந்தால் போதுமா? நான் பார்ப்பான் என்றால், நீ பிரா மணன் என்கிறாய்? நான் பார்ப்பானே வெளியேறு எனும் போது, நீ அவன் கழுத்தைப் பிடித்துக் தள்ளினால் முன் னேற்றம்; நான் பூணுரல் போடாதே என்று சொல்லும் போது, நீ அவன் பூணுரலையே அறுத்தெறிந்தால் முன் னேற்றம்; நான் கிராப் வைத்துக்கொள் எனும்போது, நீ என்னைவிட முன்னே போய் அவன் உச்சிக்குடுமியை அறுத் தால் முன்னேற்றம் இதெல்லாம் செய்யாமல் பெயரில் மட்டும் முன்னேற்றம் சேர்த்துக்கொண்டால் அது வந்து விடுமா?’ என்று கேள்விக் கணைகளை மாரிபோல் தொடுத்தார் பெரியார், குருசாமிமீது திருவையாற்றில் தொடரப்பட்ட வழக்கில் 1-2-61 அன்று தீர்ப்பு. 150 ரூபாய் அபராதம் கட்ட மறுத்து, 12-வது முறையாகச் சிறைவாசம், 9 மாத தண்டனை பெரி யாரின் சுற்றுப் பயண நிர்வாகி கோ. இமயவரம்பன், பெரியாரைப் பொதுக்கூட்டங்களுக்கு அழைப்பவர் ரூ. 75 தராமல் விட்டுவிடுவதைச் சுட்டிக் காட்டி அறிக்கை