346 ஒன்று தந்தார். திருவாரூரில் 12.2-61 அன்று நடைபெற்ற எல்.ஆர். எம்.யூ. மாநாட்டில் பெரியார், எஸ்.எஸ். பாட்சா ஆகியோருடன்,காங்கிரஸ் கட்சிச் சட்டமன்ற உறுப்பினர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டது குறிப்பிடத் தக்கது. பாளையங்கோட்டை நகரசபையிலும் பெரியார், காமராசர் படத்தை 13-3-61-ல் திறந்து வைத்தார். மத்தியில் உள். துறை அமைச்சராயிருந்த பண்டித கோவிந்த வல்லப பந்த். 6.3-61-ல் காலமானார். ஆச்சாரியார் தம்மை ராமனாகவும், கண்ணிர்த்துளிகளை அனுமார் படையாகவும் வர்ணித்துக் கொண்டதைப் பெரியார் கண்டித்தார். பொன்மலையில், 12-3-61-ல் நடைபெற்ற சுயமரியாதை மாநாட்டில் மனுநீதி, கீதை, இராமாயணம் போன்றவை பட்டாசுபோல் கொளுத்தப்பட வேண்டிவை என்று பேசினார் பெரியார். பேராவூரணி வி.எஸ். குழந்தையின் மகன் லெனின் திருமணம் 3-2-61 அன்று புதுக்கோட்டையில் பெரியார் தலைமையில் நடந்தது. 19.2-61வேலூர் ஈ.திருநாவுக்கரசு மணிவிழாவிலும் பெரியார் வாழ்த்தினார். இங்கிலாந்து அரசி எலிசபெத்தும், அவர்தம் கணவர் எடின்பரோ கோமகனும் 19.2.1961 சென்னை வருகை தந்தனர். தமிழ் நாட்டை மிகவும் விரும்புவதாக அவர்கள், முதலமைச்சர் காமராசரிடம் செய்தி விடுத்தனர். சட்டசபை மண்டபத்தில் காமராசருக்குச் சிலை எடுக்க வேண்டும் என்று பெரியார் கருத்தறிவித்தார். மதுரை தியாகராயர் கல்லூரியில் 13.3-61 அன்று, சிந்திக் கின்ற தன்மையில்லாததால் தமிழர் சமுதாயத்துக்கு வந்த கேடுகளை விளக்கினார் பெரியார்: மகான் சொன்னது, ரிஷி சொன்னது, அவதார புருடர்கள் சொன்னது என்று. பார்க்கிறோமே தவிரப் புத்தி என்ன சொன்னது என்று பார்ப்பதில்லை. ஒரே மனிதனுக்கே வயதுக்கு வயது, ஆண்டுக்கு ஆண்டு அறிவு வளர்ந்து, புத்தி மாறும்போது, 2000,3000 ஆண்டுகளுக்கு முன்பே யாரோ சொன்னது இன்று. பொருந்துமா? மனிதன் நடந்து கொள்ள வேண்டிய முறைகள், ஒழுக்கங்கள்,என்ன என்று, யாரோ முனிவரும் ரிஷியுமா சொல்வது? யார் இவர்கள்? இந்த ரிஷிகளின்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/372
தோற்றம்