356 விக்கிற, அளவுக்குமேற்பட்ட விகிதமும்-ஆகியவைகளில் தான் எனக்கு வெறுப்பு இருக்கிறது. நான் நமது நாட்டை யும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும் நாகரித்துக்கும் கொண்டு வர வேண்டும் என்கிற ஆசை யுடையவன். பார்ப்பன சமுதாயம் இதற்கு முட்டுக்கட்டை யாக இருக்கிறது என்று, சரியாகவோ தப்பாகவே நான் கருதுகிறேன். தாங்கள். அப்படி இல்லை என்பதைப் பார்ப் பனர்கள் காட்டிக் கொள்ள வேண்டாமா? உண்மை’ யிலேயே எனக்கு மாத்திரம் பார்ப்பனர்களுடைய ஆதரவு. இருந்திருக்குமானால், நமது நாட்டை எவ்வளவோ முன்னுக்குக் கொண்டுவர என்னால் முடிந்திருக்கும். s பார்ப்பன சமுதாயம் இன்றைக்குத் தங்கள் போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும். இராஜாஜியின் கட்சிக்கு, அல்லது, அவர் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிற கட்சிக்கு வோட்டுப் போட்டாலும், காங்கிரசுக்கே போட்டாலும், இரண்டுமல்லாத வேறு கட்சிக்குப் போட் டாலும் இந்தத் தேர்தலில் பார்ப்பனர்கள் பொது மக்கள் நம்பிக்கையைப் பெற முடியாது. பொது மக்கள் சந்தேகமும் மாறாது. அதனால் பார்ப்பனர்கள் இந்தத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும், யாருக்கும் வோட்டுப் போடா மல், விலகி இருப்பதே புத்திசாலித்தனமான வழியாகும். தேர்தலுக்குப் பிறகு அரசியல் திட்டம் எதுவாக இருந் தாலும், சமுதாயத் திட்டம் என்பது பார்ப்பனர் வெறுப்புத் திட்டமாகத்தான் இருக்கும். இனி, கண்ணிர்த் துளிக கட்சி தேர்தலுக்குப் பிறகு இந்த நாட்டில் உலவ வேண்டுமானால், பார்ப்பன வெறுப்புச் சாதனத்தைத்தான் கைத்தடியாகப் பிடித்துக் கொள்ள வேண்டியவர்கள் ஆவார்கள். இந்தக் காரியத்துக்கு என்னை அணுகலாம். நானும் ஆதரவளிக்கலாம். எனக்கு சமுதாயத் துறையில் பார்ப்பனர்களைத் தவிர வேறு யாரும் எதிரிகளல்லர். பார்ப்பனர்கள் நான் ஏதோ மிரட்டுகிறேன் என்பதாக கருதிவிடக்கூடாது. இதற்கேற்ற மாதிரிப் பார்ப்பனத் தலை வர்கள் அறிக்கை விடுவது நல்ம் என்று கருதுகிறேன்.”.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/382
தோற்றம்