357 அறிக்கையில் பெரியார் நுணுக்கமான பல நிலைமைகளை நன்கு ஆராய்ந்து கூறியிருந்தார். ஆனால், எதிர்பார்த்தது. போலவே ராஜாஜி, ஈ. வெ. ரா. மிரட்டுகிறார் என்ற பொருள்பட அந்த வாரக் கல்கி' இதழில் எழுதியிருந்தார். ஒட்டுச் சாவடியில் வன்முறை கையாள்வார்கள் போலும் என்றெல்லாம் திசை திருப்பிவிட்டார் ஆச்சாரியார். பெரியாருக்குக் காலில் சுளுக்கு ஏற்பட்டதால் நாற் காலியில் அமர்ந்தபடியே, 1962 சனவரி 6, 7 நாட்களில் பெரியார் திடலில் நடைபெறவிருந்த இரு மாநாட்டு முன்னேற்பாடுகளையும் நேரில் கவனித்து வந்தார். 6-ந் தேதி காலை சென்னை தியாகராய நகரிலுள்ள பர்க்கிட் சாலையில் வியூகம் வகுத்து மாபெரும் கருஞ்சட்டையினர் ஊர்வலம் புறப்பட்டது. லட்சம் பேருக்கு மேல் மக்கள் குழுமினர். தலைவர் பெரியார் அலங்கார ஊர்தியில் அமர்ந்து வந்தார். 250க்கு மேற்பட்ட பஸ்களும் டிரக்குகளும் அணிவகுத்து வர, 13 மைல் நீளத்தையும் கடந்து வந்தது அந்தப் பேரணி. ஊர்வலமே அன்றையப் பொழுதில் பெரு மளவை எடுத்துக் கொள்ளுமோ என அஞ்சிச் சிறிது குறுக்கு வழியில் வர நேரிட்டது. அதனால், தி.க. மாநாட்டில் முழுமையாகப் பெரியார் மட்டுமே பேசநேர்ந்தது. குருசாமி, வேதாசலனார், நரசிம்மன் சிறிது பேசினர். இரவு எம். ஆர். ராதாவின் லட்சுமிகாந்தன் நாடகம் சிறப்பாக நடை பெற்றது. மறுநாள் வோட்டர்கள் மாநாடு புதுமையாக, முதன் முறையாக, நடந்தது. ஈ. வெ. கி. சம்பத் வரவேற்க, ஆதித்தனார் திறந்து வைக்க, குன்றக்குடி அடிகளார் தலைமை ஏற்றார். அப்துல் மஜித், கண்ணதாசன், டாக்டர் விஜயலட்சுமி, பெரியார் உரையாற்றினர். இரவு சிவாஜி கணேசன் குழுவினரின் நாகநந்தி நாடகம் நடைபெற்றது. பெரியார் தலைமை ஏற்று, சிவாஜி தலைசிறந்த நடிகராக வும் வள்ளலாகவும் விளங்குகிறார் எனப் பாராட்டினார். பெரியாரின் மூடநம்பிக்கை ஒழிப்புக் கொள்கைகளைத் தாமும் இனிப் பின்பற்றுவதாக, சிவாஜி கணேசன் நன்றி தெரிவிக்கையில் கூறினார் நம்மை எதிரிகளாக மதித்து
பக்கம்:தந்தை பெரியார்.pdf/383
தோற்றம்