உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/387

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361 பெரியார் மருத்துவமனையில் இருந்த வண்ணம், காங் கிரசின் வீழ்ச்சி பற்றிய சர்வே, நடத்தி, காங்கிரசுக்காரர் களில் ஒருசிலரின் சிரத்தையின்மை, பகிரங்கமான துரோகம் இவை பற்றி வெளிப்படுத்தி வந்தார். 'நடந்த சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் வாழ்வுக் கட்சிகள் எல்லாமே தோல்வியடைந்துள்ளன. காரணம் காங்கிரஸ் உட்பட எல்லாக் கட்சித் தலைவர்களுக்கும் ஆணவமும் அகம் பாவமும் மிகுந்து விட்டது. என் நிலையும் அப்படித்தான். இந்தத் தோல்விகளால் ஆச்சரியாருக்கு மட்டுந்தான் ஒன்றும் நட்டமில்லை. காரணம் அவருக்குக் கேபிடல். எதுவுமே கிடையாது-" என்று விவரித்தார் பெரியார் . கண்ணிர்த்துளிகள் வெற்றி பெற்ற இடங்களில் தவறான முறைகளைக் கையாண்டதாகவும், சினிமா மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டதாகவும் குற்றம் சுமத்தப்பட்டது. தஞ்சைத் தொகுதியில் காலண்டர், சோப்பு, சுனோ, பவுடர் போன்ற பொருட்களைக் கொடுத்து ஒட்டுப்பெற்றதாக கம்யூனிஸ்ட் மணவி கந்தசாமி அவதூறு கூறினார். தேர்தல், நின்று போயிருந்த அந்தநல்லூர் தொகுதியிலும் காங் கிரசை வெற்றிபெறச் செய்யவேண்டும் என்றும், அதற்குத் திராவிடர் கழகத் தோழர்கள் வே. ஆனைமுத்து பொறுப் பில் பாடுபடவேண்டுமென்றும், 4.3-1962 அன்று பெரியார் சென்னைப் பெர்து மருத்துவ மனையிலிருந்தே அறிக்கை வெளியிட்டிருந்தார். அவர் விருப்பத்திற்கிசைய அந்தநல் லூரில் காங்கிரஸ் வென்று, திராவிட முன்னேற்றக் கழகம் தோற்றது. r பெரியார் 6-3.1962 விடுதலை'யில் மைனாரிட்டி சமு தாயம் என்ற தலைப்பின்கீழ் தீட்டியுள்ள தலையங்கம் அருமையான நல்லதொரு கருத்தை உள்ளடக்கியுள்ளது. அதாவது:-ஒரு நாட்டில், மைனாரிட்டி சமுதாயம், மைனா ரிட்டி மதம், மைனாரிட்டி கலாசாரம் கொண்ட மக்களுக்கு ஆதிக்கமோ செல்வாக்கோ இருக்குமானால், அந்த நாட்டின் நலத்துக்கும் பொது வளர்ச்சிக்கும் அவை கேடாகவே முடியும். பார்ப்பானுக்கு பயந்து நடந்ததாலும், முஸ்லீம்