373 பக்குவமாக எடுத்து வைக்கிறார் பெரியார். தென்னகத்தி. அலுள்ள நான்கு மாநிலங்களின் சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை வருமாறு:ஆந்திர்ா 301, 43; கர்நாடகம் 208, 26: கேரளம் 126, 18; தமிழ் நாடு 205, 43. இவற்றில், தமிழ் நாடு நீங்கலாக மெஜாரிட்டி அவர்களாகவே இருப்பதால், இப்போதுள்ள சூழ்நிலையில் தமிழ்நாடு கேட்பதே புத்திசாலித்தனம்என்று பெரியார் 20-9-62 விடுதலை'யில் வாதிடுகின்றார். திராவிடர் கழகத்திற்கு மீண்டும் ஒரு சோதனை ஏற் பட்ட நிலவரத்தைப் பெரியார் வேலூரில் விளக்கித் தீர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிட்ட்து. பழைய நண்பர்கள் துரோகிகளான கதையை அங்கே விவரித்தார் பெரியார். எஸ். குருசாமி, எம். கே. டி. சுப்ரமணியம், லோகநாதன், விவேகி, நாத்திகம் ராமசாமி ஆகியோரின் துரோகச் செயல் களை 29.9.62 அன்று வேதனையோடு வெளிப்படுத்தினார். இதனால் அக்டோபர் மாதத்தில் 7, 14, 15, 21, 22, 27, 28, 29 ஆகிய 8 நாட்களே கூட்டங்களில் பேசினார். "ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்’ என்ற தலைப்பில், 8-10-62 அன்று, முதல் கட்டுரையும்; 10-ந் தேதி இரண்டா வது; 14-ந் தேதி மூன்றாவது கட்டுரைகளும் வரைந்தார். இவற்றிலிருந்து, பெரியார் நீண்ட நாட்களாகவே மனத்துக் குள்ளே மறைத்து வைத்துக்கொண்டு பொருமியது வெளியா கயிற்று. துரோகத்தை அடையாளந்தெரியச் செய்தமைக்கு, உண்மையுள்ள கழகத் தோழர்கள் பெரியாரைப் பாராட்டி னர். காங்கிரசார் நடத்தும் தேசிய ஒருமைப்பாடு விழாவில் கழகத்தினர் கலந்து கொள்ளக்கூடாது எனக் கண்டிப்பாக அறிவித்த பெரியார், இந்தி மொழி மட்டுமல்ல, இந்திய ஒருமைப்பாடு பிரச்சாரங்கூட நாட்டுப் பிரிவினைக்குத் துாண்டிவிடக் கூடிய செயலாகும் என எச்சரித்தார். "நான் சரியாக அரசியலில் பிரவேசிக்காததால் டில்லி நிர்வான மாக ஆட்டம் போடுகிறது. அந்த வேலையும் என்னைத் தான் வந்து தொத்தும் என நினைக்கிறேன்' என்றும் பெரியார் சூளுரை புகல நேர்ந்தது. இராம லீலாவும்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/401
தோற்றம்