உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/404

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

376 இந்தி எதிர்ப்பாளர்கள் சுட்டிக் காட்டி, இதனை ஏன் சட்ட மாக்கக் கூடாது எனக் கேட்டு வருகின்றனர். தமிழ் மக்களின் விருப்பத்திற்கு மாறாக அண்ணாமலைப் பல்கலை கழகத் துணைவேந்கராக சர் சி. பி. ராமசாமி அய்யர் நியமனம் பெற்றார் 14-11-62 அன்று. - - பெரியார், தமது 84-ஆவது பிறந்த நாள் விழா பெரியார் திடலில் கொண்டாடப்பட்டபோது, நடிக வேள் ராதா அளித்த 10,000 ரூபாய் நன்கொடையைப் பெற்றுக் கொண் டாரல்லவா? அப்போதே வாக்களித்தவாறு-ராதா பெயரில் அங்கே ஒரு மன்றம் - ஹால் - கட்டப்படும்; அரங்கு அமைக்கப்படும். அதற்கு ராதா மன்றம் என்றே பெயர் சூட்டப்படும் என்றெல்லாம் கூறியவாறு-18-11-62 அன்று. பெரியார் தலைமையில், திரைப்படஅதிபர் பி.ஏ. பெருமாள் மன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார். ராஜாஜி சீனப் போர் குறித்துத் தாறுமாறான கருத்துகள் கூறுவதைக் கண்டித்து, அவருக்குப் பரம்பரைப் புத்தி, காட்டிக் கொடுப்பது போகுமா?- என்று எழுதினார் பெரியார். பார்ப்பான் புத்தி பார்ப்பணியம்தான்; இன்றைய வடக் கெல்லை நெருக்கடிதான் எப்படி? என்ற தலைப்புகளிலும், சீனப்போர் குறித்து, நவம்பர் இறுதி வாரத்தில், ‘விடுதலை’ தலையங்கப் பகுதியில் எழுதி வந்த பெரியார், இருவாரங்களுக்குத் தமது சுற்றுப்பயணத்திற்கும் சிறிது ஓய்வளித்திருந்தார். - - - - -- - - கிருஷ்ணமேனன் விலகி, பம்பாயிலிருந்து ஒய். பி. சவான் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்றார். ராஜாஜி பம்பாயில் பேசும்போது, வருணாசிரம அமைப்பு முறைகளும் சாதிகளும் இருக்க வேண்டியதுதான்-என்று பேசினார். தமிழ்நாட்டு அமைச்சர் ஆர். வெங்கட்ராமனே, ஆச்சாரியார் தேசிய அரசு அமைய வேண்டும்" என்றும் சீனப் பிரச்சினையை அய். நா. சபைக்கு எடுத்துச் சென்று அமெரிக்க ஆதரவு பெற வேண்டும் என்றும் சொல்லி வருவது சரியல்ல என்றார். 22-11-62 வரை தமிழக முதல்வரின் போர்நிதி 1 கோடி ரூபாயாகத் திரண்டிருந்தது.