377 கரூரில் 15-12-62 நடந்த சாதி ஒழிப்பு மாநாட்டிற்குப் பெரியார் தலைமை தாங்கினார். வே. ஆனைமுத்து திறப் பாளர். மறுநாள் நடந்த திராவிடர் கழக மாநாட்டின் தலைவர் தி. பொ. வேதாசலம், திறப்பாளர் கி. வீரமணி. திருவாரூர் தங்கராசு, சிவகங்கை சண்முகநாதன், ஈரோடு அப்பாவு, காங்கிரசுக்குப் போன ஈரோடு பி. சண்முக வேலாயுதம், கம்யூனிஸ்ட் முகவை ராசமாணிக்கம், தமிழ் தேசியக் கட்சி சம்பத், கண்ணதாசன் ஆகியோர் இந்த மாநாடுகளில் பங்கேற்றனர். குடிஅரசுப் பதிப்பக வெளி பீடுகளான பகுத்தறிவு நூல்கள் இந்த மாநாடுகளில் மலிவாக விற்பனைக்குக் கிடைக்கும் என்று பெரியாரே அறிவித்திருந்தார். х - . . . திருச்சி மாவட்டம் இடையாற்றுமங்கலம் தோழர்கள் முன்பு தென்னந்தோப்பு வழங்கியது போக, இப்போது வேறொரு தோப்பும், கட்டடமும் பத்தாயிரம் ரூபாய் பெறு மானத்தில் அன்பளிப்பாகச் சாசனம் செய்து தந்தனர். திருவாரூர் தங்கராசு பகுத்தறிவு என்ற வார இதழ் துவக்கி நடத்தினார். குருசாமி துரோகம் செய்து போனபின்னர், விடுதலை"யில் கண்ணிர்த் துளிகளைத் தாக்கி அன்றாடம் செய்தி வெளியிடும் பழக்கம் குறைந்திருந்தது. ஆனால் 25-12-52அன்று தென்றல் திரை'யில் வந்த ஒரு கார்ட்டுன் எடுத்தாளப் பட்டிருந்தது; சட்டி சுட்டதடா கை منطقة தடா என்று அண்ணா திராவிட நாடு பிரச்சினையைப் போட்டு உடைப்பதாக! . . - தேசிய அரசு அமைக்கச் சொல்ல ராஜாஜிக்கு என்ன யோக்கியதை இப்போது?-என்ற கருத்தோடு பெரியார் 1963-ஆம் ஆண்டைத் துவக்கியிருந்தார். ராஜாஜியும் சம்மாயில்லாமல், கல்கியில், திராவிட முன்னேற்றக் கழகத், தினர் திராவிடநாடு பிரச்னையைத் தூங்கப் பண்ணியிருக், கிறார்கள் என்று எழுதினார். பெரியார், நமது பழங்கால அரசர்கள் பார்ப்பன தாசர்களாக இருந்து, தமது சொத்தில் பெரும்பகுதியை மான்யமாக வழங்கியுள்ள மடமை குறித்து எழுதினார். மது விலக்கு மாபெரும் முட்டாள் தனம்’
பக்கம்:தந்தை பெரியார்.pdf/405
தோற்றம்