381 2i-2.63 விடுதலை’ பிரிசுரித்திருந்தது. சென்னை உயர்நீதி: மன்ற நீதிபதியாக கே.எஸ். ராமமூர்த்தி என்ற பார்ப்பன் வழக்கறிஞர் நேரடிநியமனம் பெற்றதைக்கண்டித்து, 19.2-63. "விடுதலை’,அய்க்கோர்ட்டில் பார்ப்பன ஆக்கிரமிப்பு என்ற மகுடத்தின் கீழ் தலையங்கம் தீட்டியிருந்தது. 20-ந் தேதி பெரியாரே எழுதியிருந்தார், பீடிக்கு வரி விதிக்கலாம் என்று. அரசாங்கத்துக்கு யோசனை தெரிவித்து. பெண்ணாடத்தில் ஒரு திருமண விழாவில் பேசும்போது பெரியார், எங்கள் சுய மரியாதைப் பிரச்சாரத்தின் விளைவுதானே இரு தார மணத்தடைச் சட்டம் வந்தது? என்று கேட்டார். மேலும், பெண்களுக்குச் சொத்துரிமை, கல்வி, உத்தியோக உரிம்ை. ஆகியவை பெருகியதும் எங்களால் தானே? என்று கேட்டா பெரியார். - . . . இந்தியக் குடிஅரசுத் தலைவர் பாபு ராஜேந்திர பிரசாத் 28-2-63 இரவு 10-30 மணிக்குக் காலமானார். பெரியார் திருச்சியிலும் தஞ்சையிலும், குருசாமி, வேதாசலம் ஆகிய இருவரின் கடந்த கால நடவடிக்கைகள் பற்றியும், தாம் இவர்களுக்கு மரியாதை காரணமாக நீண்ட தவணை தந்து விட்டதாகவும், இவர்களைவிடஅண்ணாத்துரை நூறு. மடங்கு யோக்கியர் என்றும், மிக்க வேதனை கலந்த, வருத்தத்துடன் உண்மைகளை ஒளிவிடச் செய்ய நேர்ந்தது. இன்னொரு சந்தர்ப்பத்தில், இவர்களை விட அண்ணாத். துரை ஆயிரம் மடங்குமேல் என்றே பெரியார் பேசி: இருக்கிறார். - - --- ஆண்டுதோறும் சென்னை எழும்பூரில் நடைபெறும் கைத்தறிக் கண்காட்சியில், இந்த ஆண்டு, சட்டசபை, சபாநாயகர் எஸ். செல்லபாண்டியன். தலைமையில் 11-3-63 அன்று பெரியார் பேசினார். 13-ந் தேதி விடுதலை'யில், ஒழுங்கீனமான நடத்தைக்குத் தண்டனை என்ற மகுடத்தின் கீழ், தலையங்கக் கட்டுரையைப் பெரியார் எழுதி, சட்ட மன்றங்களில் வெளி நடப்புச் செய்வது தவறு, தேவை யற்றது என்று கண்டித்தார். மற்றும், பிரிவினைத் தடைச் சட்டத்தை வன்மையாக எதிர்த்தார். இதனால் ஒரு
பக்கம்:தந்தை பெரியார்.pdf/409
தோற்றம்