உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387. யான போது, உண்மையில் அப்படிக் கோரப் - பட்டால், மீண்டும் பிராமணர் ஒட்டல் பெயரழிப்புப்போர் துவக்க நேரிடும் என்று விடுதலை’ எச்சரித்தது. இந்த ஏற்பாடு சாதியை ஒழிக்காது; மறைமுகமாகப் பார்ப்பனரை உயர்த்தி விடும் என்பது புரிந்தது. ஈ. வெ.கி. சம்பத் திருவண்ணாமலை தேர்தல் பிரச். சாரத்திற்குக் காங்கிரஸ் ஆதரவாளராகப் பேசச் சென்றார். பெரியாரும் 24 முதல் 27 வரை தொகுதியில் பேசினார்:காமராசரால்தான் தமிழ் மக்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது; இனியும் ஏற்படும். ஆச்சாரியாரின் அடிவருடி களான கண்ணிர்த்துளிகளால் என்ன சாதிக்க முடியுமெனப் பெரியார் கேட்டார். எனினும் திருவண்ணாமலைத்தொகுதி இடைத்தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழக ப. உ. சண்முகம் வென்றார். பின்னர், பெரியார் சேலம் அன்ன தானப்பட்டியில் 1.7-63 அன்று திருவண்ணாமலை தேர்தல் பிரச்சாரம் பற்றிக் குறிப்பிட்டார். நான் பத்தாயிரம் பேர் அடங்கிய பெரிய கூட்டத்தில் பேசிக் கொண்டிருக் கிறேன். யாரோ ஒருவன் அதோ எம். ஜி. ஆர். என்று கூவிக்கொண்டே ஓடினான். கூட்டத்தில் 300 பேர்கூட மீதி இல்லை, அவ்வளவு பேரும் அவன் பின்னே ஓடினார்கள். பிறகு சினிமாக்காரன் வரவில்லை என்று தெரிந்ததும், எல்லாருமே திரும்ப வந்து உட்கார்ந்தார்கள். அவர்களை நன்ருக வெளுத்து வாங்கிவிட்டேன்' என்று, மக்கள் மனோநிலையைச் சுட்டிக் காட்டினார் பெரியார். மைசூர் மாநில அரசு 100க்கு 50 இடம் பிற்படுத்தப் பட்டோருக்கு என முன்னர் அறிவித்தது போக, இந்த ஆண்டில் கல்லூரிகளில் 100க்கு 25 இடம், குறைந்த மார்க், வாங்கியவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆணை பிறப்பித் திருந்தது. வர்ணாசிரம தர்மக் காவலனான 'சுதேச மித்திரன்’ ஏடு இந்த ஏற்பாட்டைப் பாராட்டி எழுதி யதைப் படித்ததும், ப்ெரியாருக்கு ஆச்சரியம் அதிசயம். அதிசயம்!’ என்று தலைப்பிட்டு விடுதலை’ 27-6-63ல் தலையங்கம் தீட்டிவிட்டார். தஞ்சை திராவிடர் கழகத்