399 தில் நிறைவேற்றி, உச்சவரம்புச் சட்டம் செல்லுபடியாக்கப் iபடும் என்று, அரசுத் தரப்பில் நம்பிக்கை நல்கப் பட்டது. புவனேஸ்வர் மாநாட்டுக்குத் தலைமை தாங்கிய பின், டெல்லி சென்ற காமராசருக்குத் தலைநகரம் சிறப்பு மிக்க வரவேற்பு வழங்கிற்று. சாரட்டில் அமர்த்தி, ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். சத்தியம்-நீதி-நேர்மையின் :சின்னமாவார் காமராஜ் என்று டெல்லிப் பிரதேசக் காங்கிரஸ் தலைவர் வர்ணித்தார். சென்னை திரும்பிய காமராசர், 29-3-64 அன்று பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதாவுக்குப் புனித ஆடை போர்த்தினார். அந்த விழாவில் சம்பத், கண்ணதாசன், அனந்தநாயகி, சின்ன அண்ணாமலை, உமாபதி, ஜெமினி கணேசன், திருவாரூர் தங்கராசு, எஸ்.டி. சுந்தரம் ஆகியோரும் பங்கு பெற்றனர். சேலம் மாவட்டத்தில், 7-3-64 அன்று, இடைப்பாடியில், பெரியார் பேசும் போது, ராஜா ராம்மோகன் ராயின் சமுதாய சீர்திருத்தக் கருத்துகளுக்கு ஆங்கிலேயர் ஆதரவு தந்ததால், சநாதனிகள் ராணுவத்தாரைத் துரண்டிவிட்டு, அதற்குச் சிப்பாய்க் கலகம் என்று நல்ல காரணங்காட்டி, நல்ல பெயரைச் சுதந்தரத்தின் பேரால் உண்டாக்கினர். அவரது முற்போக்கான பிரம்ம சமாஜத்துக்குப் போட்டி யாகப், பழைமை வாதிகள் கூடி, ஆரிய சமாஜம் என்று ஒரு அமைப்பை ஏற்படுத்தி விட்டார்கள். சாதாரன மணி யடிக்கும் பூசாரிப் பார்ப்பானை, இராமகிருஷ்ண பரம ஹம்ஸர் என்று உயர்த்திவிட்டு, ஒரு முட்டாள் பார்ப்பன ரல்லாத பட்டதாரி வாலிபன் விவேகானந்தனை, அவனுக்குச் சீடனுக்கி, அமெரிக்காவுக்கும் அனுப்பினார்கள் பார்ப்பனர்கள்! ஒருவெள்ளைக்கார மாது அன்னிபெசண்ட். அந்த அம்மாளைக் கொண்டு, பிரம்ம ஞானசங்கம் ஏற்படுத் தினார்கள். சாதாரண ஆத்மா, தங்களுக்கு அனுகூலமாக இருந்த வரையில் அவரை மகாத்மா ஆக்கினார்கள்; பிறகு தீர்த்துக் கட்டினார்கள்-என்று, இரண்டு நூற்றாண்டுகளில் திகழ்ந்த, வரலாற்று முக்கியத்துவம் நிறைந்த, சில நிகழ்ச்சி களை நினைவு கூர்ந்தார் பெரியார்! - r
பக்கம்:தந்தை பெரியார்.pdf/427
தோற்றம்