உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/428

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 கேரள மாநிலத்தில், மருத்துவம், பொறியியல் போன்ற தொழிற் கல்லூரிகளின் இட ஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோருக்குச் சலுகை காட்டியது.செல்லாது என, அரசு உத்தரவையே ரத்துச் செய்தார் ஒர் அய்க்கோர்ட் பார்ப்பன நீதிபதி. அரசு டிவிஷன் பெஞ்ச் அப்பீலுக்குச் சென்ற போது, அதே அய்க்கோர்ட்டின் பார்ப்பனரல்லாத நீதிபதி இருவர், அரசு ஆணை செல்லும் என்று தீர்ப்புக் கூறி னார்கள். ஒரே அய்க்கோர்ட்டில் ஆளைப் பொறுத்து நீதி, மாறுபடும் விசித்திரத்தை, இதோ கேரளா உதாரணம்” என்ற தலையங்கத்தின் வாயிலாக, 8-4-64 'விடுதலை’ எடுத்துக் காட்டியது. அன்றே, சுப்ரீம் கோர்ட் கண்டன. நாள் கொண்டாடும் போது, நிறைவேற்றப்படும் தீர்மான வடிவம், விடுதலை'யில் ஒரு நமூனா அமைப்பில், விளக்க, மாகத் தரப்பட்டுமிருந்தது. - யானை வேட்டைக்குத்தானே நாம் செல்கிறோம் என்பதால், வழியில் எதிர்ப்படும் நரிகளை விட்டு வைப்ப தில்லை பெரியார்; ஆதரவின்றிக் கிடக்கும் ஆடுகளைத் துரக்கி விடவும் தவறுவதில்லை! அண்ணாமலை யூனிவர் சிட்டியில் பார்ப்பனர் ஆதிக்கம் என்ற தலையங்கத்தில் 6-4-64 அன்று, சர் சி. பி. ராமசாமி அய்யரின் ஆணவ அட்டி காசங்களைக் குறிப்பிட்டுக் காமராசர் போன பின்பு, பார்ப்பனர்க்குத் தைரியமும் துணிவும் ஏற்பட்டுவிட்டது. செட்டி நாட்டரசர் இதில் உடனே தலையிட வேண்டும். பார்ப்பனரல்லா மாணாக்கர்க்கு நீதி கிடைக்க வழி செய்ய வேண்டும்’ என எழுதினார் பெரியார். மாயூரம் سكانه தி. க. தலைவர் சவுரிராசன், திருவிளையாட்டம் என்ற தம் ஊரில் தமது சொத்தெல்லாம் செலவழித்து நடத்தி வரும் உயர்நிலைப் பள்ளியை நானே பார்த்திருக்கிறேன். அதைச் சீர்திருத்த, நன்கொடையாக ரூ.200/- இப்போது நானும் தந்திருக்கிறேன். தோழர்களும் உதவிட வேண்டுகிறேன்' என்று பெரியார் கனிவுரை நல்கினார்; 11:4-64 விடுதலை’ யில். வில்லிவாக்கத்தில் ஏப்ரல் 11-ஆம் நாள், குன்றக்குடி அடிகளார் தலைமையில் நடைபெற்ற சாதி ஒழிப்பு