407 இது பெரிய தேசிய விழா,போலிருந்தது என்றே குறிப்பிட் டிருந்தார். காமராசர் படத்துடன், அவரது சமதர்மம் பற்றிய பொன்மொழிகள்', 'விடுதலை"யில், கட்டத் துக்குள், தொடர்ந்து 15 நாட்கள் வரை பிரசுரமாயின. ஆங்கிலத்தில் மெட்ராஸ் என்றும், தமிழில் தமிழ்நாடு என்றும் வழங்குவதுதான் அரசின் முடிவு என்று அமைச்சர் ஆர். வெங்கட்ராமன் 24-7-64-ல் அறிவித்தார். - ‘'எதிரிகளால் குறை சொல்ல முடியாத அரசாங்கம் காங்கிரஸ் அரசாங்கம். இதனிடம் சமதர்மத் திட்டம் இருப்பதால் காங்கிரசில் மக்கள் சேருவதும் இதை ஆதரிப் பதும் தவறல்ல” என்று ஜூலை 19 முதல் 21 வரை காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்துப் பல கூட்டங்களில், காரைக்கால் பகுதிக்குள், பெரியார் சொற்பொழி வாற்றினார். சென்னையை அடுத்த ஆலந்துாரில் 23-ம் நாளன்று கடவுள் ஒழிப்பு மாநாடு, புதிதாக நடைபெற்றது; காஞ்சி சி.பி. ராசமாணிக்கம் தலைமையில், வீரமணி திறந்து வைத்தார். பெரியார், எம். ஆர். ராதா, தங்கராசு கலந்து கொண்டனர். தீர்மானங்களை விளக்கிப் பெரியாரே விடுதலை"யில் எழுதினார். செப்டம்பர் 1-ம் நாள் கேரவன்' இதழ் காமராசரைப் பாராட்டி எழுதிய கட்டுரையில், பெரியாரின் பணியினையும் சிறப்பித்திருந்தது! 19-4-1961-ல் உதயமான சம்பத்தின் தமிழ் தேசியக் கட்சி 6-9-1964 அன்று அஸ்தமனமாகி விட்டது; அதாவது காங்கிரசுடன் இணைந்து விட்டது. பெரியார் திடலில் காலை 9 மணிக்கு சம்பத், கண்ணதாசன், எஸ். சி. சி. அந்தோணிப் பிள்ளை ஆகியோர் காமராசரிடம் தங்கள் தமிழ் தேசியக் கட்சியை ஒப்படைக்கும் விழா. மாலையில், கடற்கரையில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்திற்கு, இவர்கள் ஊர்வலமாகச் சென்று, அங்கு வரவேற்கப் பட்டார்கள். அதிலிருந்து, 1967 வரை சம்பத், காங்கிரசின் மிகப்பெரிய பிரச்சார பீரங்கியாக முழங்கி வந்தார்;ஒருநாள் கூட ஒய்வின்றிச் சுற்றுப் பயணம் செய்தார். த. தே. க. காங்கிரசுடன் இணைந்த செய்தி விடுதலை"யில் விளம்பர
பக்கம்:தந்தை பெரியார்.pdf/435
தோற்றம்