408 மாக வெளியிடப் பட்டது. அந்த ஆண்டு விடுதலை', பெரியார் 86-வது பிறந்த நாள் மலர்,200 பக்கங்களுடன், ஒரு ரூபாய் விலையில், சிறப்பாகக் கொணரப் பட்டது. 10.9-64 அன்று கேரளாவில், தாழ்த்தப்பட்டவரும் காங்கிரஸ் முதலமைச்சருமான சங்கர் கவிழ்க்கப் பட்டு, ஜனாதிபதி ஆட்சி பிரகடனப் படுத்தப் பட்டது. * 17-9-64 தந்தை பெரியார், 86-ஆம் ஆண்டில் அடி எடுத்து வைக்கும் நாள், திருச்சியிலுள்ள பெரியார் பயிற்சிக் கல்லூரிகளின் நிறுவனர் நாளில் பெரியாருடன் 1,000 பேர் விருந்துண்டனர்; சம்பத், வீரமணி சொற்பொழிவாற்றினர். திருச்சியில் கல்லூரி ஒன்றை நிறுவிட, 5 லட்சம் ரூபாய் வழங்கியருளினார் வள்ளல் ஈ.வெ.ரா. பெரியார். வழக்கம் போலப் பிறந்த நாள் செய்தியும் ஈந்திடத் தவறினாரல்லர்:“நான் இப்புவியில் 85 ஆண்டுகள் வாழ்ந்து, 86-வது ஆண்டில் புகுகிறேன். என்ன செய்து விட்டாய்? என்று நீங்கள் கேட்கலாம். அதற்குப் பதில், நீங்களே தான் தேடிப் பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். ஒய்வு ஒழிச்சல் இன்றி, கழிப்பிணித்தன்மை இன்றி, உழைத்தேன். திருட்டு புரட்டு மோசடி இன்றி வெள்ளையாய் நடந்துகொண்டேன். என் நடத்தையில் பல தவறுதல்கள் தகாத காரியங்கள் ஏற் பட்டு இருக்கலாம். என்னையே நீதிபதியாகக் கொண்டு, எனக்குச் சரியென்று பட்டதையும், தேவை என்று பட்டதை யும், செய்தேன். அதுவும், ஒளிவு மறைவு இல்லாமல் செய்து வந்தேன். வாழ்வில், செயலில் நான் பல ஏமாற்றம் அடைந்து இருக்கலாம். ஆனாலும், அதையே ஒரு படிப் பிணையாகக் கொண்டு, முயற்சியில் சளைக்காமல், நடந்து கொண்டுதான் வருகிறேன். நான் ஒரு அநாமதேய வாழ்வு வாழவில்லை என்பதும், அநாவசியமான மனிதனாய் இருந்து வரவில்லை என்பதும், எனக்கு ஒரு ஆறுதல் தரத் தக்க விஷயம். நான் 1,034 பிறை கண்டவன்; அதனால் (Ք(Ք வாழ்நாள் வாழ்ந்து விட்டேன்! எனவே, கிரமப்படிப் பார்த்தால், உங்களிடம் நான் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியதுதான், எனது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/436
தோற்றம்