409 நேர்மையான கடன்! அதற்கேற்ப எனக்குப் புத்திக் கோளாறு ஒன்றும் இல்லை என்று நான் கருதினாலும், ஞாபகக் கோளாறு அதிகமாகிவிட்டது. பேசப் பேசப், பேச்சுத் தொடர் மறந்து போகிறது. வெகு கெட்டிக்காரத் தனமாய்ச் சமாளித்துக்கொள்கிறேன். காது 100க்கு 40பங்கு சப்தம் கேட்பதில்லை. (செவிடு) கண்கள் கண்ணாடி போட்டாலும் 10 அல்லது 20 வரி (அதுவும் மைக்கா 12 பாயிண்ட்டு)க்கு மேல் படிக்க முடிவதில்லை; கண்களில் கண்ணிர் வந்து மறைத்து விடுகிறது. நடை 10 எட்டு, அதாவது, 15 அடி தூரத்துக்குமேல் நடந்தால், நெஞ்சுத் துடிப்பு அதிகமாகிக் களைப்பு வந்து விடுகிறது. அதுவும் துணைப் பிடிப்பு இல்லாமல் நடக்க முடிவதில்லை. ஹெர்னியா (குடல்வாதம்) என்னும் நோய் இருப்பதில், உட்கார்ந்திருக்கும் போது, ஒரு இளநீர் அளவு பரிமாணம் குடல் இறங்கி, சிறு வலி கொடுத்துக் கொண்டே இருக் கிறது. நின்றால் ஃபுட்பால் (உதை பந்து) அளவுக்குப் பெருகிப் பெரு வலி கொடுக்கிறது. இந்தக் காரணங்களில் நானே என்னைக் கண்டெம்டு மேன்' (தள்ளப்பட்ட மனிதன்) என்றே கருதி வாழ்ந்து வருகிறேன். இப்படிப்பட்ட தொந்தரவுகளால் நான் அவதிப் படாமல் இருக்கும் வண்ணம், நோய் தெரியாமல் இருக்க, டாக்டர் குளோரோஃபார்ம் (மயக்க மருந்து) கொடுப்பது போல், பணம், பண்டம் தாராளமாகக் கொடுத்து உற்சாகப் படுத்தி விடுகிறீர்கள். திருச்சியில் ஒரு கல்லூரி ஏற்படுத்த 5 லட்சம் ரூபாய். செலுத்தப் பட்டுள்ளது. வகுப்பு வாரி உரிமைக்காகவும் சமதர்மத் திட்டத்தைச் செயல் படுத்துவதற்காகவும் நாம் கிளர்ச்சி செய்ய வேண்டியவர்களாக இருந்தாலும், இப்போது பிரச்சார அளவில் இருந்தால் போதும்! எப்போதுமே கிளர்ச்சிக்காரர்களாகவே இருக்க வேண்டும் என்று நாம் ஆசைப்படக் கூடாது! இன்று தமிழர் சமுதாயத்திற்கு மாத்திரமல்லாமல், ஏழை எளியவர் சமுதாயத்திற்கும், இரட்சகர் என்கிற
பக்கம்:தந்தை பெரியார்.pdf/437
தோற்றம்