உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/438

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

410 முறையில் காமராசர் இருந்து வருகிறார். காமராசரை உற்சாகப் படுத்தும் அளவுக்கு நமது ஆதரிப்பு, ஆட்சிக்கும் காங்கிரசுக்கும் இருக்க வேண்டியது அவசியமாகும். இதுவரை நாம் ஒன்றும் செய்யவில்லை என்று கருதி விடாதீர்கள். அரசியல் ரீதியில் இன்று காங்கிரசுக்கு, காமராசருக்கு எதிர்ப்பு இல்லாமல் ஆக்கியது நமது இயக்கம் தான். பார்ப்பான் குள்ள நரி ஆகி விட்டான்; முஸ்லிம் லீக் இன்று செல்லாக்காசு ஆகிவிட்டது; கண்ணிர்த்துளி, நாட்டுக்கு நியூசென்சாகி விட்டது. இது யாரால்? இதற்குக் காங்கிரஸ் என்ன செய்து விட்டது? சலிப்படையாமல் நமது தோழர்கள், கடவுள் மத சாஸ்திர சம்பிரதாய ஒழிப்புக் காரியங்களில், நம் தனிமையை எப்போதும் மறந்து விடாமல், தொண் டாற்றலாம்’ 1963-64 ஆகிய இந்த 85-வது வயதில் பெரியார் சுற்றுப் பயணம் மேற்கொண்ட நாட்கள் 165, பேசிய பொதுக் கூட்டங்கள் 139, கலந்து கொண்ட கழக மாநாடுகள் 6, நடத்தி வைத்த திருமணங்கள் 20 என்பதாக ஒரு புள்ளி விவரம் தெரிவிக்கிறது: . மண்ணச்சநல்லூரில் பெரியாருக்குக் காளைகள் பூட்டிய டிரக் வண்டி ஒன்று வழங்கப் பட்டது. சொந்த நகரமாகிய ஈரோட்டில் எடைக்கு எடை மஞ்சள் அன்பளிப்பு; நகர மன்ற வரவேற்பு, முதலாளி சாயபு அவர்களால். பெரியார் சுதந்திரப் போராட்ட வீரர் என்ற தகவலை அதிகார பூர்வ மாக அந்தத் தகவலுடைய சேகரிப்பாளரான டாக்டர் எஸ். விஜயலட்சுமி அறிவித்தார். காஞ்சியில், பெரியாரின். எடைக்கு இருமடங்கு எடையுள்ள அரிசி வழங்கப்பட்ட போது, அதைக் கூட்டுறவுச் சங்க விநியோக முறை மூலம் மக்களுக்கே தரச் சொன்னார். கரூரில் துலாபாரம் நடத்திக் கைத்தறிப் போர்வைகள் அளித்தனர். . - தாழ்த்தப்பட்ட சமுதாயத் தலைவர் என். சிவராஜ் தமது 72-வது வயதில் 29.9-64 அன்று மறைந்தார். வீரமணி.