411 யின் மைத்துணி சூரிய குமாரிக்கும், கல்லூரி விரிவுரையாளர் தோழர் சா.கு.சம்பந்தத்துக்கும் பெரியார் திடலில் 27-9-64அன்று திருமணம் என்னும் செய்தி அறிவிப்பும், அழைப்பும், பெரியார்-மணியம்மையார் கையொப்பங்களுடன் வழங்கப் பட்டது. உணவு நெருக்கடியை வியாபாரிகளே செயற்கை யாக உண்டாக்கி விடுகிறார்கள். அதனாலேயே அவர்களுக் கிருந்த மரியாதை போய் விட்டது. இல்லாததை இருப்ப தாகப் பத்திரிகையாளர்கள் பெரிதுபடுத்துகிறார்கள். உணவு சம்பந்தமான செய்திகளைய்ாவது shprest Pre-censor GeflûtLi வேண்டும்” என்ற கருத்துகளைப் பெரியார் விடுதலை'யில் எழுதினார். - சேலத்தில் அக்டோபர் 10, 11 தேதிகளில் நடந்த ஊர் வலம், பொதுக்கூட்டம் ஆகியவற்றில், பெரியார் கலந்து கொண்டார். பி.ரத்தினசாமிப் பிள்ளை, எஸ்.என்.ஏ. அஜீஸ் (தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளர்-மிக இளமையில் காலமாகி விட்டார்) பாலதண்டாயுதம், சம்பத், கண்ண தர்சன் பங்கேற்றனர். சிவாஜி கணேசன், தான் பெரியாராக நடித்து, ஒரு திரைப்படம் எடுக்கப்போவதாக அறிவித்தார். (இதுவரை எடுத்ததாகத் தெரியவில்லை!) நன்றி கூறும் முகத்தான் பெரியார், கலையுலகில் மறுமலர்ச்சி உண்டாக்கும் நடிகர்கள் சிவாஜி கணேசன், எம். ஜி. ராமச் சந்திரன் ஆகியோர்-" என்று குறிப்பிட்டார். 15.10.64 அன்று பக்தவத்சலத்தின் 68-வது பிறந்த நாளில் 'நாமும் வாழ்த்துகிறோம்' என்று எழுதிற்று :விடுதலை." ‘'சிரிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தத்தின் மூலமாக இந்தியா இலங்கைச் சிக்கல் தீர்ந்தது. 3 லட்சம் தமிழர்கள் அங்கு குடியுரிமை பெறுவார்கள்; 5.25 லட்சம் பேர் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டு விடுவார்கள்!' என்ற செய்திக்கு முதற் பக்க முக்கியத்துவம் தந்தது விடுதலை.” -- திருவள்ளுரில் பெரியாரின் எடைக்குச் சமமாகக் காய் கறிகள் வழங்கினார்கள். 21-10-64-ல் அங்கே பேசும்போது, 'நண்பர் அண்ணாதுரையும், கருணாநிதியும் அடுத்தபடியாக நாங்கள்தான் ஆளப்போகிறோம்என்கிறார்களே-அப்படியே.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/439
தோற்றம்