420 விடுதலை"யில்.முதல் பக்கத்தின் ஏழு காலத் தலைப்புச் செய்திகள். 16-2-65 அன்று மு. கருணாநிதி கைது. பாது காப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எனத் தெரிகிறது’ என்று விடுதலை’ ஏடு அறிவித்தது. திருச்சியிலும் கண்ணிர்த் துளி சட்டமன்ற உறுப்பினர்களும், தோழர் களும் கைதாயினர்; கிளர்ச்சியினால் ரயில்வேக்கு 7 கோடி நட்டம்” என்றும் பிரசுரித்தது. ** . . . . . "சுதந்திரப் போராட்டத்திற்குப் பயந்து ஆங்கிலேயன் வெளியேறவில்லை. உலகயுத்தம் காரணமாய் இந்தியாவுக்கு" விடுதலை தந்துவிட்டுச் செல்ல நினைத்தான்’ என்று ராஜாஜி சென்னை கோகலே ஹாலில் 8.2-65 அன்று பேசியது கண்டு, ராஜாஜி உண்மையைக் கக்கி விட்டார்!" என்றார் பெரியார்! ஏன் எனில், இதுவே பெரியார் கருத் தல்லவா? பிப்ரவரி, மார்ச் மாதங்களில், 4, 5 கூட்டங்களுக்கு மேல் பெரியார் வெளியில் பயணம் மேற்கொள்ளவில்லை. திருச்சியில் திராவிடமணி' இதழ் நடத்திய டி. எம். முத்து 18.2.65ல் காலமானார். 23.2.65 அன்று அறிக்கையில், தமிழ் நாடு மாணவர் கவுன்சில், நடந்த சம்பவங்களுக்கு வருத்தந் தெரிவித்து, இனி, உள்நாட்டு நிலவரம் சரியில்லாததை முன்னிட்டுக் இளர்ச்சி நிறுத்தப்படுகிறது. முதியவர்கள் பார்த்துக் கொள்வார்கள் - என்று தெரிவித்துவிட்டது. நான் மறியவில் கலந்து கொள்ளவில்லை. கலந்து கொண்ட மாணவர்களைத், தடையை மீறாதீர்கள் என்று சொல்லத்தான் போனேன்’ என்று குன்றக்குடி அடி களார் தன்னிலை விளக்கம் தந்திருந்தார். இங்கிலிஷ்ே இணை மொழியாக நீடிக்கும் என்று பிரதமர் சாஸ்திரி கிறினார். "சுதேசமித்திரன்’, ‘மாலை முரசு", 'தினத்தந்தி', 'முரசொலி’, ‘மாலைமணி ஆகிய பத்திரிகைகள் மீது அரசு வழக்குத் தொடர்ந்தது. "மாலைமணி இளங்கோ, முரசொலி மாறன், இன்த் தந்தி டி. ஆர். பீம்சிங் கைதாயினர். மத்திய அரசு உபரி பட்ஜெட்டும், தமிழக அரசு புதுவரியில்லாத பட்ஜெட்டும், இந்த ஆண்டுக்குச் சமர்ப்பித்தன. சர்க்காருக்கு நல்ல படிப்பினை” என்று 2-3.65ல் பெரியார் விடுதலை’ தலையங்கம் தீட்டினார். இப்போது
பக்கம்:தந்தை பெரியார்.pdf/448
தோற்றம்