423 கிறார்கள். இது வெற்றியா? வெட்கக்கேடான தோல்வியா? என்று சிந்திக்க வேண்டும்! இவ்வளவு அக்கிரமங்களையும் செய்த பார்ப்பானோ, பத்திரிகைக்காரர்களோ, பணங் கொடுத்துத் தூண்டிவிட்டவர்களோ அகப்படாமல் தப்பித் துக் கொண்டார்கள்! கூலிக்குச் செய்தவர்களைத் தேடிப் பிடித்து வருகிறது இந்த வீர அரசாங்கம். அப்பாவித் தமிழர்களே! பார்ப்பான் சூழ்ச்சியைப் புரிந்து கொள்ளுங்கள்! பாவம், கருணாநிதி மட்டும் மாட்டிக் கொண்டார்! அவர் தோழர்களே, அவரை மாட்ட வைத்திருப்பார்கள். இப்போது சங்கராச்சாரியார்கூட, ஆயுதம் வைத்துக் கொள்வது தற்காப்புக்காக அவசியந்தான், என்று சொல்வி விட்டார். காங்கிரசையும் நாம் ஏதோ பயன்படுத்திக் கொள்ளலாமே தவிர நம்ப முடியாது என்பது, அண்மையில் நடந்த சம்பவங்களால்,அறிந்து கொண்டுவிட்டோம்' என்று இந்தக் கருத்துகளைப் பேசியும் எழுதியும் பெரியார் வெளிப் படுத்தினார். தொடர்ந்து, தர்மபுரி இடைத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்துப் பேசவும் புறப்பட்டு விட்டார். - - 26.3-65 அன்று மதுரை முத்து குழுவினர் அய்வருக்குச் சிறைத்தண்டனை. .மு. கருணாநிதி, என். வி. நடராசன் இருவருக்கும் ஆறுமாத தண்டனை செஷன்ஸ் கோர்ட்டில் ஊர்ஜிதமாயிற்று. கருணாநிதி வேறு வழக்கில் பாளையங் கோட்டைத் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். * கருணாநிதியை விடுதலை செய்” என்று ஒரு சுவரொட்டி யும், பக்கத்திலேயே, 'கொலை கொள்ளை தீயிடல் அரசிய லாகாது, அறமும் அன்று. குற்றம் புரிந்தோரை விடாதே' என்று வேறொரு சுவரொட்டியும் ஒட்டப்பட்டிருந்தனஎன்று விடுதலை" செய்திகளை வெள்யிட்டது! 'தருமபுரி வோட்டர்களே, உஷார்! கலவரக்காரர் களை ஆதரிக்காதீர்!-கண்ணிர்த்துளிகள் கூட்டுச் சதிக்கு இடந்தராதீர்!’ என்று விடுதலை’ எச்சரித்தது. 1962ல் ராஜாஜி சொற்படி நடப்போம் என்றார்கள். 1963ல் வல்ல வரே! நல்லவரே வழி காட்டுங்கள் என்றார்கள்" என்றும்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/451
தோற்றம்