425 தஞ்சாவூரில் காய்கனி மார்க்கெட்டுக்குக் காமராசர் மார்க்கெட் என்று ஏப்ரல் 16-ம் நாள் பெரியார் பெய ரிட்டார். கல்லக்குறிச்சியில் 18-ம் நாள் சாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. விடுதலை ஏட்டுக்குச் சந்தா செலுத்தும் நிகழ்ச்சி, விமரிசையாக அங்கு நடைபெற்றது. பெரியாருக்கு வெல்ல துலாபாரமும் செய்யப் பட்டது. இந்த மாதத் திட்டத்தில் நெல், அரிசி, மணிலா, காய்கறி, கண்ணாடிக் குவளைகள், உப்பு, வெங்காயம் ஆகியவை பல ஊர்களிலும் பெரியாரின் எடைக்குச் சமமாக அன்புடன், அளிக்கப் பட்டன. 24 ராணிப் பேட்டை, 26 திருவண்ணா மலை நகராட்சிகள் பெரியாருக்கு வரவேற்பளித்தன. சென்னை மாநகராட்சியில் ஊழல்கள் நடப்பதாகவும்: கண்ணிர்த்துளிக் கவுன்சிலர்களே தங்கள் நிர்வாகத்தைக் குறை கூறுவதாகவும், விடுதலை'யில் அடிக்கடி சேதிகள் வந்தன. நீண்டகால இயக்கப் பிரமுகர் வேலூர் ஈ. திருநாவுக்கரசு 3-5-1965 மாலை 7.30 மணிக்கு மறைந்தார். "விடுதலை துணைத் தலையங்கம் தீட்டி மரியாதை செய்தது. - திருநெல்வேலி நகரமன்றம் மே 8-ம் நாள் பெரியாருக்கு வரவேற்பளித்த போது, அரசியல் கட்சிகளால் நகர நிர்வாகம் பாழாகிறது; நம்முடைய மக்கள் இன்னும் ஜன் நாயகத்துக்குத் தயாராக வில்லை' என்று பெரியார் கருத்துக் கூறினார். கும்பகோணம் திராவிடர் கழகத் தோழர்களும், சட்டமன்ற உறுப்பினர் ஏ.ஆர். ராமசாமி, கா.பா. பழநி ஆகியோரும் முயன்று, 5,000 ரூபாய் செலவில், பெரியாருடைய வேனைப் புதுப்பித்துத் தருவதாக முடி வெடுத்து, அவ்வாறே, மே இறுதியில், பெரியார் பிறத்தநாள் விழா எடுத்து, அங்கு வண்டியை அளித்தனர். காமராசர் திருச்சியில், தகுதி திறமை பேசுகின்ற மோசடி ஒழிய வேண்டும்' என்று தீவிரமாகப் பேசினார். தமிழ் நாட்டின் 9 மாவட்டங்களில் 18 நாட்களில் 1,600 மைல் சுற்றுப் பிரயாணம் செய்து சென்னை திரும்பியபோது, செண்ட்ரல் ரயில் நிலையத்தில் காமராசருக்கு மகத்தான வரவேற்புத்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/453
தோற்றம்