உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

426 தரப்பட்டது. பெரியாருடைய பிரச்சாரப் பயிற்சி வகுப்பு நடத்தும் முறையில், மேலும் சிறிது அபிவிருத்தியுள்ள திட்டம் ஒன்று வகுக்கப் பட்டிருப்பதாக, வே. ஆனைமுத்து அறிவித்தார். அதன் பிரகாரம், பெரியாரவர்கள் திருச்சி மாவட்டத்தில், ஜூன் 18 முதல் 28 முடிய சுற்றுப் பயணம் நிகழ்த்தும் போதே, சில குறிப்பிட்ட ஊர்களில், பகற். பொழுதில், பயிற்சி வகுப்புகளை நடத்துவார்கள் என்ப தாகும். - ஜூன் மாதம், பெரியாரைத் திருச்சியில் ஆனந்த விகடன்' துணையாசிரியர்கள் சாவி, மணியன் இருவரும் பேட்டி கண்டு, கட்டுரை வெளியிட்டனர். அதில் வ.வே.சு. அய்யரைப் பற்றிப் பெரியார் குறிப்பிட்ட சில விவரங்களை மறுத்து, அய்யர் மகனும், இன்னொருவரும் தெரிவித்த் கருத்துகளையும்; அவற்றுக்குப் பெரியார் அளித்த விளக்கத் தையும் ஆனந்தவிகடன்' பிரசுரித்திருந்தது. அவற்றி லிருந்து, பெரியாரின் கருத்து சரியெனவே நிரூபணமாயிற்று. பெரியாருக்குத் திண்டுக்கல் தோழர்கள் தங்கள் பகுதி விளை பொருளான சிறுமலைப் பழத்தைத் துலாபாரம் செய்தனர். "ஆட்சியினரும் சமதர்மத் திட்டத்துக்கு எதிர்ப்பாகி வருகின்றனர்! சம உரிமை வழங்கப்படாவிடில் பிற்படுத்தப் பட்ட வகுப்புகள் முன்னேறுவது எங்ங்னம்?’ என்று. பெரியார் ஆத்திரத்தோடு கேட்டார். பக்தவத்சலம் ஆட்சி. யில், பார்ப்பனர் மீண்டும் ஆதிக்கம் பெற்றுப், படிப்படியே உயர்ந்து வருவதைக கண்காணித்ததால், இப்படிப் பேச நேரிட்டது. செக்ரெடேரியட்டா? அக்ரகாரமா?’ என்று: ‘விடுதலை’’ ஜூன் 19-ந் தேதியில் தலையங்கமே எழுதி யிருந்தது. * 'கம்பனும் இராஜாஜியும் ஒரே தன்மையர்கள்-கம்பன் பார்ப்பன அடிமை, தமிழர் துரோகி; இராஜாஜி தமிழர் விரோதி; தமிழர் துரோகி;-இவர்கள் இருவரையும் பாராட்டு கின்ற தமிழனே கீழ்மகனாக்கப் படுகிறான்' என்று வேதனையோடு எழுதினார் பெரியார். மேலும், அண்ணா மலைப் பல்கலைக் கழகத்தில் துணை வேந்தராயிருந்து