430 கயில் ஒரு விழாவில் பெரியார் பொன்னாடை போர்த்தினார். பெரியாரும் மணியம்மையாரும் தோழர்களுடன் சென்னை யில் ராஜா சர் இல்லம் சென்று, அவருக்கு நேரில் வாழ்த்துக் கூறினார்கள். 2-8-1965 விடுதலை'யில் பெரியார் மிக்க மனவருத்தத்துடன் 'நமது முதல்வர்' என ஒரு தலையங்கக் கட்டுரை திட்டினார்:-"எஸ்.எஸ்.எல்.சி.தேறியவர்கள்எல்லா ருக்குமே கல்லூரியில் இடந்தரமுடியுமா? என்று நமது முதல மைச்சர் கேட்டாராம்! எந்த நாட்டிலுமே இது இயலாதே என்றாராம்; வேறு எந்த நாட்டிலும் ஜாதிகள் இல்லையே? இங்கு எப்படியும் பார்ப்பான் 100க்கு 100 இடம் பெற்று விடுவானே? நம்மவனுக்குத்தானே இடம் கிடைக்காது? இமய உச்சிக்கும், பசிபிக் ஆழத்துக்கும் ஒப்பிட முடியுமா? இந்த மாகாணத்தில் வருடந்தோறும் கல்விக்காகச் செல வழிக்கிற 40 கோடி ரூபாயில், இந்த நாட்டுக்கு உரியவனுக் குப் பங்கு இல்லையா? அரசாங்கம் உடனே ஒரு சுற்றறிக்கை யாவது விடவேண்டும். பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முதலுரிமை கொடுத்துவிட்டு, மற்றதை எப்படி வேண்டு மானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்’ என்று. நமது முதல் மந்திரியார் செய்வாரா? அவரோ மேல் ஜாதி!' தொடர்ந்து பெரியார் எழுதி வந்தார்; சமுதாய நீதியை வழங்கித், தற்காலக்கல்வி நெருக்கடியைத் திருங்கள்-என்று. 'காங்கிரஸ் ஜாதியை ஒழிக்கிறது, பணக்காரனை ஒழிக் கிறது; அப்பேர்ப்பட்ட காங்கிரசை ஒழிக்கத் திராவிட முன்னேற்றக் கழகம் விபீஷணராக இருக்கிறது. உழவர் கட்சி, குடிஅரசுக் கட்சி, முத்துராஜா கட்சி, நாம் தமிழர், தமிழ்அரசு, இடதுசாரி கம்யூனிஸ்டு, ஆச்சாரியாரின் கட்சி, வியாபாரிகள் கட்சி இவை அத்தனையும்சேர்ந்து காங்கிரசை பலவீனப்படுத்துவது சமூகத் துரோகமல்லவா? என்று பெரியார் வினவினார். மரியாதைக்குரிய குன்றக்குடி அடி களாரைக் கோர்ட்டுக்கு வரச்சொல்லி 500ரு. அபராதம் போடுவதா? தமிழன் ஆட்சியே தமிழர்க்குக் கேடாவதா? பதவி முழுவதும் பார்ப்பானுக்கா? வகுப்புரிமை பெற இயலாதென்றால் இந்திய யூனியனிலிருந்து விலகுங்கள்.
பக்கம்:தந்தை பெரியார்.pdf/458
தோற்றம்