431 தமிழகம் பிரிந்தாலன்றிக் குறைதீர வழியில்லை. மதவெறி :யுள்ள ஆட்சியில், சமதர்மம் எப்படி வரமுடியும்? இந்த மந்திரிகளே, எல்லாரும் தகுதியற்ற மந்திரிகள்! இந்த அர சாங்கமே நமக்குத் தகுதியில்லை!"-ஆகஸ்ட் 10 முதல் 16 வரை சென்னையின் பல முக்கிய பேட்டைகளில் நடந்த பொதுக்கூட்டங்களில் பெரியாரின் முழக்கம் இவ்வாறுதான் இருந்தது! 'குடும்பக் கட்டுப்பாடோ, கருத்தடை செய்வதோ இயற்கைக்கு மாறானது; சுயக்கட்டுப்பாடுதான் தேவை என்ற ராஜாஜியின் பிற்போக்கு வாதத்தைச் சாடியது விடுதலை”. கண்ணிர்த்துளிக் கட்சியைச் சார்ந்த நடிகர்களான எஸ்.எஸ். ராஜேந்திரன், டி.வி. நாராயண சாமி ஆகியோர் மீது நடந்த வழக்கில், 100 ரூபாய் அபராதம் அல்லது 6 மாதச் சிறைவாசம் விதிக்கப் பட்டது. இன்னொரு நடிகரான எம்.ஜி. ராமச்சந்திரன் 8-8-65 அன்று பெரியார் திடலில் நடந்த காமராசர் பிறந்தநாள் விழாக் கூட்டத்தில் கலந்துகொண்டு, காமராசர் என் தலைவர்; அண்ணா என் வழிகாட்டி என்றார். பெரியாரையும் பாராட்டினார். மலேயா வுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு, சிங்கப்பூர் தனி நாடாகப் பிரகடனம் செய்துகொண்ட நிகழ்ச்சி, ஆங்கிலேயருக்கு அதிர்ச்சி தந்தது! அறிஞர் அண்ணா கீழ்த்திசை நாடுகளில் , வெற்றிகரமான ஒரு சுற்றுப் பயணம் சென்று 21.8.65 அன்று குதுகலத்துடன் திரும்பினார். நாகப்பட்டினத்தில், தஞ்சை மாவட்ட திராவிடர் கழகம் கூடி, பெரியாரின் 87-ம் பிறந்த நாளில், ரூ 40,000 நிதி திரட்டி உதவுவதெனத் தீர்மானித்தது. திருச்சி காஜா மலையில் பெரியார் ஈ.வெ.ரா. கல்லூரி 24.8-65 அன்று தமிழக முதல்வர் பக்தவத்சலம் அவர்களால் தொடங்கப் பட்டது. 5; லட்சம் ரூபாய் பணம் உதவிய கல்வி வள்ளல் பெரியாருக்கு, முதல்வர் பொன்னாடை போர்த்தினார். பெரியாரைப் பேசச் சொல்லவில்லை. கல்லூரி பிரின்சி பால் கமலக்கண்ணன் வரவேற்றார். மாவட்ட ஆட்சித் தலைவர் சொக்கலிங்கம் தலைமை ஏற்றார். -
பக்கம்:தந்தை பெரியார்.pdf/459
தோற்றம்