உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/460

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

432 'இந்திய அரசியல் சட்டம் மோசடியானது. இந்திய அரசியல் சட்டம் பித்தலாட்டமானது. தமிழர்களுக்குத் திராவிட மக்களுக்குத் துரோகமானது. இந்திய அரசியல் சட்டம் யோக்கியமற்ற தன்மையானது. இதை இயற்றிய அரசியல் நிர்ணயசபை, பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப் பட்டதல்ல. அரசியல் சட்டம் இயற்றுகின்ற காரியத்துக் காகவும் அது தேர்ந்தெடுக்கப்பட்டது அல்ல! சுதந்தரமே மோசடியானதுதான்!” என்ற கருத்தினைப் பெரியார் எழுதி னார். ஆகாசவாணியில் பி. எஸ். சிவஸ்வாமி அய்யர், சேலம் விஜயராகவாச்சாரியார், எஸ். சத்யமூர்த்தி அய்யர், ரைட் ஆனரபிள் வி.எஸ். சீனிவாச சாஸ்திரியார் ஆகிய நான்கு பெரு மக்களின் பிறந்தநாள் விழாக்கள் மட்டுமே ஒலிபரப்பாகும்-என்ற வர்ணாசிரம தர்மச் செய்தியை, விடுதலை’ 1-9-65 அன்று பெட்டிச் செய்தியாக வெளி யிட்டுக் காண்பித்திருந்தது! - பாகிஸ்தான்-சீனா இருநாடுகளும் வட இந்தியப் பகுதி களில் தொல்லை தந்துவந்தன. நம் துரோகிகளை நம்பியும், பார்ப்பனர்களின் - பத்திரிகைகளின் காட்டிக்கொடுக்கும் தன்மையை நம்பியும் படையெடுத்த பாகிஸ்தான், ஒரு போதும் நம்மை வெல்ல முடியாது. பொதுமக்கள் அய்ந் தாம் படையினரின் விஷமங்களுக்கு இடந்தரக்கூடாது. கண்ட்ரோல், ரேஷன் முதலியவற்றால் நமக்கு எவ்வளவு கஷ்டம் வந்தாலும் பொருட்படுத்தாமல், நம் அரசுக்குப் போர் முயற்சிகளில் நாம் உதவ வேண்டும்,' என்று பெரியார் தமது சுற்றுப் பயணத்தின்போது பிரச்சாரம் புரிந்தார். இந்த ஆண்டு தமது 87வது பிறந்தநாள் விழா அன்று பெரியார். பெங்களூரில் இருந்தார். ஜி.டி.நாயுடு அங்கு சென்று வாழ்த்துக்கூறியதோடு, கோவையில் குறிப்பிடத் தக்க ஒருவிழாவுக்கு, அதன் விவரம்கூறாமலே, பெரியாரிடம் தேதி பெற்றுச் சென்றார். காங்கிரஸ்காரரான திருமதி கமலா யாதவ் அம்மையார் தலைமையில், பெங்களூரில், பெரியார் பிறந்த நாள் விழாவும், பாக்கிஸ்தான் ஆக்கிர மிப்புக் கண்டன நாளும் சீருடன் கொண்டாட்ப் பெற்றன