433 சனகம்மையார் பெரியாருக்குப் பண ஆடை போர்த்தினார். சி.டி. அரசு,விசாலக்குமி சிவலிங்கம் வாழ்த்திப்பேசினார்கள். பெரியாரின் 87-வது ஆண்டு பிறந்த நாள் செய்தி இப்படி யாக அமைந்திருந்தது: "இந்தியாவுக்குச் சமீபத்தில் வந் திருந்த ஒரு ரஷ்யப் பிரமுகரிடம் ஒரு பார்ப்பனர்-இந்தி யாவுக்கு யார் வத்தாலும் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வருவதுதான் முக்கியமான காரியம் என்று சொல்லி, அவரைச் சங்கராச்சாரியாரிடம் அழைத்துப் போனாராம். அந்த ரஷ்யர், பல விஷயங்களைப் பற்றிச் சங்கராச்சாரி யாரிடம் பேசிவிட்டுக் கடைசியில் உங்கள் நாட்டில் உங்கள் சம்பிரதாயத்திற்கும், உங்கள் மத சம்பிரதாயத்திற்கும் விரோதமாகப் பெரியார் ஓர் இயக்கம் நடத்துகிறாரே, அதைப்பற்றி உங்களுடைய கருத்து என்ன-? என்று கேட்டாராம். அதற்குச் சங்கராச்சாரியார்-ஆமாம்! அப்படி ஒர் இயக்கம் நீண்ட நாட்களாக நடைபெற்று வருகிறது என்றாலும், அது இன்றைக்குப் பதினேழு வருடங்களுக்கு முன் வரையில் நாங்கள் மிகக் கவலை கொள்ளவேண்டிய அளவுக்கு நடந்தது. இப்போது அதைப்பற்றிக் கவலைப் படவேண்டிய அவசியமில்லாத நிலை ஏற்பட்டு விட்டது. அதன்பாட்டுக்கு அது நன்டபெறுகிறது என்றாலும், அதனால் இன்று எங்களுக்கு எந்தவிதத் தொந்தரவும் இல்லை என்றாராம். - r இப்படி அவர் சொல்லக் காரணம் என்ன? என்று அந்த ரஷ்யர் என்னிடம் வந்து கேட்டார். அவர் இப்படி என்னைக் கேட்கும்போது ஒரு பார்ப்பனரும் கூட இருந்தார். அது ஒரு நல்ல அளவுக்கு உண்மைதான். எப்படி என்றால், நம் நாட்டுக்குச் சுதந்திரம் வந்து 17-ஆண்டுகள் ஆகிறது. அது பார்ப்பனருக்கு வந்த சுதந்திரமே ஆகும். நம்மிலிருந்து விளம்பரமும் செல்வாக்கும் பெற்ற ஒரு கூட்டம் பார்ப் பனருக்கு நிபந்தனையற்ற அடிமையாகக் கிடைத்துவிட்டது. அதனால் பார்ப்பனர்கள், இடையில் இழந்ததையெல்லாம்.' திரும்பவும் பெற்றுக் கொண்டு, மேலேற நல்ல வசதி ஏற்பட்டது. பெ.-28
பக்கம்:தந்தை பெரியார்.pdf/461
தோற்றம்