436 வினாவுக்கு, ஆம். அது தி. மு. க.வுக்குச் சிறப்பான நாளாகும் என்றும், அண்ணா பதில் கூறியிருந்ததை, 30-9-65 விடுதலை'எடுத்தாண்டு, நவீன விபீஷண சரணா கதி’ என மகுடமிட்டிருந்தது. சீனா, பாக்கிஸ்தான் படை யெடுப்பில் இந்திய அரசுக்கு விரோதமான கருத்துகளைக் கூறி வந்ததால் திண்டிவனத்தில் ராஜாஜியின் சுயராஜ்யா" கல்கி' இதழ்களுக்குத் தீயிடப்பட்டது. பின் சென்னை அலுவலக எதிரில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது. 2.10-65 அன்று,புதிதாக அமைந்த தர்மபுரிமாவட்டத்தை முதலமைச்சர் துவக்கி வைத்தார். கோவையில் அக்டோபர் 3-ம் நாள், விஞ்ஞான மேதையும் தொழில் முனைவருமான ஜி. டி. நாயுடு, ஓர் ஒப்பற்ற புதுமையினைப் புகுத்தினார். பெரியாருடைய தொண்டுக்குக் கிடைத்த பலன்; வேறெங்கோ போக வேண்டிய பணம் தொழிற் கல்விக்கு வருகிறது, என்று நாயுடு குறிப்பிட்டவாறு, அவரது நிர்வாகத்தில் அமைக்கப்பட்ட்,சிருங்கேரி ஜகத்குரு சங்கராச் சார்ய வித்யா தீர்த்த சுவாமிகள் பயிற்சிப் பள்ளியைப், பெரியார் திறந்து வைத்து, "நான் என் Policyயை மாற்றுவ துண்டு. ஆனல் என் Principle என்றும் மாறாது. எனது தொண்டினால் சங்கராச்சாரிகள் மனமாற்றம் குறித்து நான் பெருமைப்படுகிறேன். அவரது உதவி, தொழில் கல்விக் கூட்த்துக்குக் கிடைத்தது பற்றி மகிழ்ச்சியடை கிறேன். இதைப் பயன்படுத்திக் கொண்ட நாயுடுகாரு பாராட்டுக்கு உரியவர். எனக்குச் சென்னையில் டிராம் ஷெட் இடத்தை வாங்கித் தந்தவரே நாயுடுதான்’ என்று பெரியார் பேசினார். சர் பி. டி. இராஜன் மேல் நாட்டில் இருந்து வர முடியாததால், ஈ. வெ. ராமசாமிப் பெரியார் பயிற்சிப் பள்ளியை, நாடாளுமன்ற உறுப்பினர் ராம கிருஷ்ணன் திறந்து வைத்தார். டி. எம். நாராயணசாமிப் பிள்ளை தலைமையில் தி. சு, அவிநாசிலிங்கஞ் செட்டியார் வாழ்த்திப் பேசினார். சர் சி. வி. ராமன் விஞ்ஞானக் கண் காட்சியைத் திறந்தார். இந்தியாவிலேயே முதன் முறையாக சங்கராச்சாரியாரின் பணி இதுதான் என்பது, அங்கு குறிப்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/465
தோற்றம்