439 தங்கிச் சிகிச்சை பெற்றபின்னர், 4-12-65 முதல், பிரயாணம் தொடர்ந்தார். கும்பகோணம் இயக்கப் பெரியவர் கே.கே. நீலமேகம், டிசம்பர் 17-ம் நாள் மறைந்தார். விடுதலை’ அலுவலகம், 15-ம் நாள் முதல் ரண்டால்ஸ் ரோடுக்கு மாற்றப்பட்டுவிட்டது. ராதா மன்றத்தில், அரசுத்துறை சார்பில் நடந்த, காய்கறிகள் கோழிகள் காட்சி ஒன்றைச் சக்கர நாற்காலியில் அமர்ந்தவண்ணமே, பெரியார் சுற்றிப் பார்த்துக், கோழி வளர்ப்பதால் நல்ல லாபம் கிடைக்கிறது. மேலும் அது நல்ல சத்துணவைத் தருகிறது, அதாவது கோழி முட்டை தவிரக் கோழியும் நல்ல உணவாகுமே' என்றார். (சம்பத் இதைக் கேட்டுத்தான் கோழிப்பண்ணை வைத்தாரோ, என்னவோ?) - - கம்யூனிஸ்டுத் தீவிரவாதிகளான இடதுசாரிகளில், பாது காப்புக் கைதிகளாக இருந்த சிலரை, வெளியே விடுவதற்கு இணங்கிய உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல் கைதிகளுக்குச் சந்தர்ப்பம் கொடுப்பது விரும்பத் தக்கதாகும் என்று கூறியதைப், பெரியார் வன்மையாகக் கண்டித்து, ஜட்ஜு களுக்குச் சிந்திக்கச் சக்தி வேண்டும் என்றார். திருச்சியில் ஒரு நீதிமன்றத்தில், பாமரர் ஒருவரைக் கூண்டிலேற்ற நேர்ந்த போது, எம்.எஸ். வெங்கட்ராமய்யர் என்ற வக்கீல் பார்ப் பனர் நீதிமன்றம் இப்போது ஒரு காமராஜைப் பார்க்கப் Gumáspár (The honourable court will see one Kamaraj now)’ என்று பகிரங்கமாகக் கேலிசெய்தார். முத்துக்குமார் சாமி என்ற தமிழ் வழக்கறிஞர், ஏன் ஓர் அகில இந்தியத் தலைவரைக் கிண்டல் செய்கிறீர்கள்?’ என்று கேட்டார். சிவசுப்ரமணிய அய்யர் என்ற இன்னொரு பார்ப்பன வக்கீல் 'அதில் என்ன தப்பு?’ என்று கேட்டார். பார்ப்பனரின் மனப்போக்கை வெளிப்படுத்த, இதைக் கண்டித்துப் பேசப் போவதாக விளம்பரப்படுத்தியே, பெரியார், டிசம்பர் 18-ல், திருச்சியில், ஒரு பொதுக்கூட்டமே நடத்திக் கண்டித்தார். சங்கராச்சாரியார், திருமணங்களைச் சிக்கனமாக 500 ரூபாய் செலவில் முடிக்கவேண்டும் என்று அறிவுரை கூறின்ார். *நல்ல யோசனைதான். நாட்டில் லஞ்சம் குறையும். பார்ப்ப
பக்கம்:தந்தை பெரியார்.pdf/468
தோற்றம்