446 காங்கிரஸ் மாநாடு ஜெய்ப்பூரில் கூடிக் கலைந்துவிட்டது; இனிக் காங்கிரசின் அடுத்த வேலைத் திட்டம் என்ன? காமராசர் கவனம் செலுத்தியாக வேண்டும். காமராசரின் சமதர்மத் திட்டங்களை இன்னும் நல்ல முறையில் பிரச் சாரம் செய்யப் பத்திரிகைசள் வேண்டும். புதிதாகவும் துவங்க வேண்டும். ஆரம்பத்தில் நட்டம் வரும். அதற் காகப் பின் வாங்கக் கூடாது. என்னுடைய யோசனை ஏற்றுக் கொள்ளப்பட்டுப், பத்திரிகை நடத்தி நட்டமானால் ஒரு ஜில்லாவின் பொறுப்பை நானே ஏற்றுக்கொண்டு ஈடு செய்யத் தயார்!-என்று அறைகூவல் பாணியில் ஒர் தலையங்கம். 3. * - - - பிப்ரவரி முதல் வாரம் கரண்ட்’ இதழ், தென்னாட்டின் தலைவர் காமராஜ் அல்ல; அண்ணாதுரைதான்! என்று புகழ்ந்து எழுதிவிட்டது! மதுரைப்பல்கலைக்கழகம் துவக்கப் பட்டுப் பன்மொழிப் புலவர் தெ. பொ. மீனாட்சி சுந்தர -னார் முதலாவது துணைவேந்தரானார். அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராக சி. பி. ராமசாமி அய்யருக்குப் பிறகு யார் என்பது வினாக்குறியாகவே விளங்கியது. பெரியாருடைய சுயமரியாதைத் திருமண விளக்கவுரை கிராமபோன் தட்டாக வெளிவந்து, ஒரு செட் விலை எட்டு ரூபாய் எனக் கழகத்தின் மூலம் விற்பனை ஆகிவந்தது. 24.2-66 அன்று, என். எஸ். சம்பந்தம் அவர் களின் மாமனாரான மத்துர் ராஜாகிருஷ்ணன்,அவர்கள் மறைவுக்குப் பெரியாரும் மணியம்மையாரும் சென்று, துக்கம் விசாரித்தனர். 7-3-56 அன்று, சென்னையில் திரைப். பட அதிபர் ஜி.என். வேலுமணியின் மகன் சரவணனுக்கும் சாந்திக்கும் திருமணம், பெரியாரும் காமராசரும் கலந்து கொள்ள ஏற்பாடு. தவிர்க்க இயலாத காரணங்களால் காமராசர் இருக்க இயலவில்லை. வரவேற்றுப் பேசிய எம்.ஜி.ஆர். கலையுலக ரத்தினங்களில் ஒருவர்-என்றார் பெரியார். யாராவது ஒருவர். ஒரு உதவி நமக்குச் செய்தால் நன்றி என்று சொல்லலாம். பெரியாரைப்போல் நமக் .காகவே வாழ்கின்றவர்களுக்கு நாம் செலுத்தும் நன்றி,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/475
தோற்றம்