452 கொளுத்தி, எரித்துச் சாம்பலாக்கிக் காட்டவேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன். பெரியார் கட்டளைப் படியே 11-8-66 அன்று சென்னை யிலும், பிற இடங்களிலும் இராமாயணம் கொளுத்தப் பட்டது என்பதைக் கூறவும் வேண்டுமா? திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளில் இறங்கி விட்டது. 10 லட்ச ரூபாய் தேர்தல் நிதி திரட்டும் பொறுப்பினை அண்ணா, தனது கழகப் பொருளாளர் கலைஞரிடம் நம்பிக்கையோடு தந்துவிட்டார். அவரும் கச்சை கட்டிக் கொண்டு களத்தில் குதித்து விட்டார். ஒரே நாளில் கொடி விற்பனையில் லட்ச ரூபாய் சேர்ந்தது. காமராசரையும் கர்ங்கிரஸ் சமதர்மத்தையும் கேலி செய்யும் காகிதப்பூ: என்னும் நாடகத்தை எழுதித், தாமே நடித்து, நிதி திரட்டினார்; நிதியும் குவிந்தது! பெரியாருக்கு அறவே பிடிக்காத சுதந்திராக் கட்சி-அதாவது ராஜாஜி-யின் முழு ஆதரவும் தி. மு. க.வுக்கே கிடைத்து வந்தது. முஸ்லீம் லீக், இடதுசாரி கம்யூனிஸ்ட், நாம் தமிழர், தமிழரசுக் கழகம் போன்ற கட்சிகளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அணியில் உறுதியுடன் நின்றன. நேரு மறைந்த பின்னர், காமராசரும் மாநில ஆட்சியை விட்டு விலகிப் போன பின்னர், பெரியாருக்குக் காங்கிரஸ் மீது நம்பிக்கையில்லை, எனினும், தம்மை நம்பியவரை நட்டாற்றில் விட மனமின்றித், தமக்கு நேரிட்ட ஏமாற்றங் களையும் அவமதிப்புகளையும் பொருட்படுத்தாமல், 1967 தேர்தலிலும் காங்கிரசுக்காகப் பிரச்சாரம் செய்து விடுவது என்ற முடிவில், தம்மைத் தாமே அடிக்கடி தேற்றிக்கொள்ள வேண்டிய சூழ்நிலைகளும், சலிப்பும், தளர்வும் பெரியாருக்கு நேரிட்டுவந்தன. தனிப்பட்டமுறையில். காமராசரைத் தவிர, பெரியாரிடத்தில் கனிவோடு நட்ந்து கொண்ட காங்கிரஸ் மந்திரிகள் வேறு எவருமிலர் பார்ப்பனரல்லாத சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்களிலும், இனவுணர்வு படைத்த மிகச் சிலரே, பெரியாரை மதித்துப் போற்றியவர். ஆட்சியிலுள்ள அதிகாரிகளிலும், பார்ப்பனரல்லாதாரும்கூடப் பெரியா ரிடம் அணுக அஞ்சியே ஒதுங்கினர். அரசியல் ரீதியாகவும்,
பக்கம்:தந்தை பெரியார்.pdf/481
தோற்றம்