453 தங்களுக்கு என்றே முழு நேரப் பிரச்சாரம் செய்து வரும் திராவிடர் கழகத்தைக், காங்கிரஸ் கட்சியோ, கட்சிச் சார்பான ஏடுகளோ அங்கீகரிப்பதில்லை. மாறாகத், தாக்கிய சம்பவங்கள் உண்டு! அரசு விளம்பரம், செய்தி முதலியவை ‘விடுதலை'க்குத் தரப்பட்டதே கிடையாது! இன மானங் காக்கும் ஒரே இலட்சியத்துக்காகப், பெரியார் இந்தத் தடவையும் காங்கிரசை ஆதரித்தார், மனப்பூர்வமாக! 17-9-1966 பெரியார் 87 ஆண்டுகளைக் கடந்து 88-ல் பொன்னடி பதித்திடும் நாள். வழக்கம்போல் கழகத் தோழர் களுக்குப் பெரியார் தமது பிறந்தநாள் செய்தி ஒன்றை அருளி னார்:-"எனக்கு இன்று 88-ஆம் ஆண்டு பிறக்கிறது. நான் பேராசைக்காரனாக இல்லாமல், இயற்கையை ஒரளவுக்கா வது உணர்ந்தவனாக இருப்பவன். ஆனால், உங்கள் எல்லா ரிடமும் முடிவுப் பயணம் சொல்லிக் கொள்ள வேண்டியவன் ஆவேன். அது மாத்திரமல்லாமல் நான் சிறிதளவு பகுத்தறிவு உடையவனாக இருந்தால் என் வாழ்வில் எனது லட்சியத்தில் முழுத் திருப்தியடைந்து ஒய்வு எடுத்துக் கொள்ள வேண்டிய வனாவேன். என் உடலைப் பற்றிய எவ்விதக் கவலையும் இன்றி, நேர்ந்தபடி நடந்து, கிடைத்ததை எல்லாம் நேர்கூறு இன்றி உண்டு, அனுபவித்து வந்த தான், 87 ஆண்டு முடிந்து 88-ம் வயதில் புகுகின்றேன் என்ற அதிசயத்தை நினைத்துத் தான், இனிமேலும் வாழ ஆசைப்படுவது பேராசை என்று குறிப்பிட்டேன். r . அது போலவே தான், ஒரு சார்பும் இல்லாதவனாகத், தனித்து, எந்த ஒர் ஆதரவும் அற்றவனாகி, என்னையே எண்ணி நின்று, பாமர மக்கள், படித்தவர்கள், பிறவி ஆதிக்கக்காரர்களாகிய பார்ப்பனர்கள், சர்வ சக்தியுள்ள பத்திரிகைக்காரர்கள், போதாக் குறைக்கு அரசாங்கத்தார் ஆகிய அனைவருடைய வெறுப்புக்கும் அதிருப்திக்கும் எதிர்ப் புக்கும் விஷமப் பிரச்சாரத்திற்கும் தண்டனை கண்டனங் களுக்கும் ஆளாக இருந்து, எதிர்ப்பையும், போராட்டங் களையும் சூழ்ச்சிகளையும் சமாளித்துப் பொது மக்களால் கனவு என்று கருதப்பட்ட எனது இலட்சியங்களை-இவை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/482
தோற்றம்