457 'பசுவைக் கொல்வது மாத்திரம் கூடாதது என்பதற்கு என்ன அவசியம் என்பது நமக்குப் புரியவில்லை. பால் கறக்கும் பெண் மாடு நல்ல நிலையில் இருந்தால், அந்தப் பசுவை யாரும் கொல்லுவதில்லை. வேலைக்கு லாயக்காக இருக்கும் ஆண் மாட்டையேகூட நம் நாட்டில் யாரும் கொல்வதில்லை. r - - இது எப்படியோ இருந்தாலும், உலகில் பொதுவாக 100க்கு 95 மக்களுக்குப்பசு ஒரு ஆகாரப் பண்டமாய் இருந்து வருகிறது. குறிப்பாக, இந்தியாவில் உள்ள 46 கோடி மக்களில் முஸ்லீம்கள் கிறிஸ்தவர்கள் 10 கோடி போக, ஆதித் திராவிட மக்கள் சுமார் 6 கோடி போக, மீதி உள்ள 30 கோடி மக்கள் மாத்திரமே பசு மாமிசம் சாப்பிடாதவர் களாக இருக்கலாம். எனவே, இந்தியாவில் மூன்றில் ஒரு பாகம், அதாவது, 100க்கு 33 மக்களுக்கு ஆகாரமாய், உண வாய் இருக்கும் ஒரு ஜீவனைக் கொல்லக்கூடாது என்றால், இதில் ஆணவம் தவிரக், கூடாது என்பதற்கு என்ன சமா தானம் சொல்ல முடியும்? உலகில் உண்மையாய் மாமிசம் சாப்பிடாதவர்கள்-300 கோடியில் சுமார் 20 லட்சம் பேர் கூட இருக்க மாட்டார்கள். இவர்களுக்காக, இவர்கள் மனம் புண்படும் என்பதற்காக, அல்லது இவர்களது மத சம்பிரதாயத்துக்கு விரோதம் . என்பதற்காக, யாரும் மாட்டைக் கொல்லக்கூடாது என்று சட்டம் செய்ய வேண்டும் என்று ஒருவர் உண்ணா விரதம் இருந்தால், அவரைப் பைத்தியக்கார ஆஸ்பத்திரியில் வைத்துத்தான் காப்பாற்ற வேண்டும்! நான் எனது 25 வயதிலிருந்தே மாட்டு மாமிசம் சாப் பிட்டு இருக்கிறேன். பல தடவை, மாட்டு மாமிசம் சாப்பிட வேண்டும் என்று மக்களுக்குச் சொல்லி, எழுதி யிருக்கிறேன். இன்றைய நிலைமையில் ஏழைகள் மாமிசம் சாப்பிட வேண்டுமானால், மாட்டு மாமிசந்தான் மலிவாகக் கிடைக்கக் கூடியதாய் இருக்கிறது. மாட்டு மாமிசத்தில், நாம் சாப்பிடும் மற்ற மாமிசத்தைவிட உணவுச் சத்து அதிக மாக இருக்கிறது. மேலும், பன்றி, கோழி, மீன், பறவை
பக்கம்:தந்தை பெரியார்.pdf/486
தோற்றம்