உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/488

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

459 கொண்டு காமராஜர் தப்பிப் பிழைக்க உதவியவர் கோதண்ட பாணி என்னும், திராவிட முன்னேற்றக் கழகத் தமிழ்த். தோழர் ஒருவராவார்! இந்தக் காலித் தனத்தைக் கண்டு உண்மையிலேயே பெரியார் மிகவும் மனம் பதறிப், பதைத்துப் போனார். 15.11.1966 'விடுதலை'யில் தீவிரமான ஓர் அறிக்கை வெளி. யிட்டார் பெரியார். - - - 'இந்தியா முழுவதிலுமிருந்து பார்ப்பன சாதுக்கள், சந்நியாசிகள் ஆயிரக்கணக்கில் டெல்லியில் கூடிக் கலவரம் செய்திருக்கிறார்கள். பசுவதை தடுத்தல் என்பது பொய்' யான ஒரு காரணமேயாகும். காரணம், பார்ப்பனருடைய வர்ணாசிரம தர்மத்துக்குக் கேடு வந்துவிட்டது என்பது. ஒன்றேதான். அந்தக் கேட்டை உண்டாக்கியதும் காம ராஜர் என்கின்ற ஒரே காரணந்தான் காமராஜர் இருந்த வீட்டுக்கு நெருப்பு வைக்க முக்கிய காரணமாகும். பார்ப்பானுக்கு மாட்டுக் கொலையைப் பற்றி அக்க்றை" இருக்கிறதென்பது, அப்துல் காதர் ஆடி அமாவாசையன்று தன் தகப்பனாருக்குத் தர்ப்பணம் கொடுத்தார், என்பது போன்ற கதையேயாகும். எல்லா ஆரியர்களுக்கும் மாடு தான் முக்கிய ஆகாரமாய் இருந்திருக்கிறது. இவ்வுண்மை இன்றும் மனுதர்ம சாஸ்திரத்தில், பார்ப்பன தர்மமாய் இருந்து வருகிறது. இப்படிப்பட்ட மக்களுக்குப் பசுவதைத் தடுப்பு உணர்ச்சி ஏற்பட்டது என்றால், இதை எந்த மடையன்தான் நம்புவான்? நமது சரித்திரம் தெரிய, இந்த நாட்டில் காமராஜரைப் போல் ஒர் இரட்சகர் இதுவரை தோன்றியதில்லை. அதனால்தான் பார்ப்பனர்களும், பார்ப்பன அடிமைகளும், காமராஜர் மீது ஒரு கண் வைத்து இருக்கின்றார்கள். அவர் இருந்த வீட்டைக் கொளுத்தினார்கள், காமராஜருக்கு, ஏதாவது ஏற்பட்டால் அவருக்கு ஒன்றும் நட்டமில்லை. அவரது தாயார்கூட மயக்கம் வரும்வரை அழுவார்கள்; அவ்வளவுதான்! பிறகு நம் நாடு வர்ணாசிரம தர்ம நாடாகி