உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/491

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17. பிணைந்தார் காங்கிரஸ் தோல்வி தம் தோல்வி. அண்ணா சந்திப்பும் பெரியார் ஆதரவும்-கடவுள் மறுப்பு வாச கங்கள் அறிவிப்பு-டெல்லி ஆதிக்கக் கண்டன நாள் - லக்னோ பயணம்-கோயில் கர்ப் பக்கிரக நுழைவுக் கிளர்ச்சி அறிவிப்பு. ஒத்தி வைப்புசிந்தனையாளர், பகுத்தறிவாளர் கழகங்கள் தோற்றம்-பிராமணாள் பெயர் அழிப்புக் கிளர்ச்சிஅனைத்துச் சாதியும் அர்ச்சராகச் சட்டம்; சுப்ரீம் கோர்ட் தீர்ப்பும் கண்டனமும்-சேலம் மூடகம் பிக்கை ஒழிப்பு மாநாடு-1967 முதல் 1972 முடிய. 196 7 சனவரித் திங்களில் தேர்தல் வேலைகள் மிகுந்த முனைப்புடன் நடைபெற்றன. பெரியாரின் பிரச்சாரப் பணி தொய்வின்றி நடந்துவந்தது. முழுநம்பிக்கையோடு காங்கிரஸ், மீண்டும் தமிழக ஆட்சிப்பொறுப்பில் அமரலாம் என்று எண்ணி, வேலை செய்தது. எதிர்க் கட்சிகளுக்கு எல்லாவகையான தொல்லைகளும் தரப்பட்டன. திராவிட முன்னேற்றக் கழகம் தனது விருகம்பாக்கம் மாநாட்டை வரலாற்றுச் சிறப்புடையதாக நடத்தி முடித்திருந்தது. காமராஜர் படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்கிறார். படுப்பது நிச்சயம். ஆனால் ஜெயிப்பது சந்தேகம்' என்று