உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/492

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

463 அந்த மாநாட்டில் பேசினார் ராஜாஜி. சைதாப்பேட்டைத் தொகுதியில் திருவாளர் பதினொருலட்சம் போட்டியிடு வார்’ என்று அண்ணா, கலைஞரின் பெயரை அறிவித்தார். ம.பொ.சி. உதயசூரியன் சின்னத்திலேயே தியாகராயநகர் தொகுதியில் போட்டியிட்டார். அண்ணா தென்சென்னை நாடாளுமன்றத் தொகுதியைத் தேர்ந்தெடுத்ததால், தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றும் எண்ணமோ நம்பிக் கையோ இல்லாமல்தான் போட்டியிடுவதாக, மாற்றாரை நினைக்கத் துண்டிற்று! அண்மையில் பக்தவத்சலம் ஆட்சியில் நடைபெற்ற துப்பாக்கிப் பிரயோகங்கள் போதாது என்று, புரட்சிநடிகர் எம். ஜி. ராமச்சந்திரனை நடிக்வேள் எம்.ஆர். ராதா கைத்துப்பாக்கியால் சுட்டுவிட்ட தாகச் செய்தி பரவியது. எம்.ஜி.ஆர். பரங்கிமலைத் தொகுதிக்கே செல்ல முடியாமல், மருத்துவமனையில் படுக் கையில் இருக்க நேர்ந்தது. திராவிட முன்னேற்றக் கழகத் தேர்தல் பணிகளில் இந்தத் தடவை மாணவச் சமுதாயத் தின் பங்கு அதிகமாயிருந்தது. போலீசார் ஆளுங்கட்சிக்கே அனுசரணையாகவும், எதிர்க்கட்சிகளை அடக்கி ஒடுக்கவும் பயன்படுத்தப்படுவது கண்டு, கலைஞர் மு.கருணாநிதி மனம் வெதும்பி, மயிலைப் பொதுக் கூட்டத்தில் பேசும்போது தேர்தல் முடிய இன்னும் ஆறு நாட்கள் உள்ளன. ஆறே நாளில் ஆட்சி மாறும். அட்டகாசம் வேண்டாம் என்று எச்சரித்தார். என்ன, மிரட்டுகிறாரோ? என்று பக்தவத் சலம் அலட்சியமாய்ப் பேசினார். தேர்தலுக்கு முதல் நாளிரவு கலைஞரையே தீர்த்துக் கட்டக் காலிகள் முனைந்தனர். - எப்படியோ? எல்லாருடைய கணிப்புக்கும், எதிர்பார்த்த முடிவுக்கும் முரண்பாடாகத், தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கின. அய்யோ! இவர் தோற்றிருக்கக் கூடாதே' என்று அண்ணாவே மனம் வருந்தக், காமராசர் விருதுநகரில் தோற்றார். தமிழர்களுக்கு மத்திய மந்திரிசபையில் இடம் போயிற்றே! என்று; சி. சுப்ரமணியமும், ஆர். வெங்கட் ராமனும் தோற்றபோது, அண்ணா ஆதங்கம் தெரிவித்தார்.