469 பெரியாரின் கொள்கையான பகுத்தறிவு, ஜாதிஒழிப்பு, வகுப்புவாரி உரிமை இவைகளில் எதுவுமே காங்கிரஸ்காரர் களுக்கு உடன்பாடல்ல! ஆனால் திராவிட முன்னேற்றக் கழகத்தாருக்கு உடன்பாடு உண்டு! எதிர்த்துப் பேசியதே இல்லை என்பதும் உண்மை! தி.மு.க. தலைவர்கள் பகுத் தறிவு வாதிகள், மந்திரிகளில் பார்ப்பனர் யாருமில்லை; பகுதிப் பேருக்குமேல் முன்பே திராவிடர் கழகம்-சுய மரியாதை இயக்கங்களில் இருந்தவர்கள். தி.மு.க. சோஷலிசத்துக்கு விரோதமாக இருக்காது என்பதால், இப்போது பார்ப்பனருக்குத்தான் இது நெருக் கடியான காலம்; சோதனைக் காலம் எனவே, இந்த மந்திரி சபைக்கு நம்மால் தொந்தரவு வரக்கூடாது என்று பெரியார் உறுதியாகக் கருத்துக் கொண்டார். பெரியார் எப்படி எண்ணுவார் என்பது அண்ணாவுக்குத் தெரியாதா? அரசியலில் கண்ணியத்தையும் நாகரிகத்தையும் கற்பித்து, நாட்டில் வேரூன்றச் செய்த அண்ணா பதவி ஏற்றவுடன், சென்னையில் உள்ள தோழமைக் கட்சித் தலைவர்களை எல்லாம் சென்று சந்தித்தார்; காங்கிரஸ், கட்சித் தலைவர்கள் இல்லங்களுக்கும் சென்று சந்தித்தார்! அவர் மனம் அமைதி பெறவில்லை! ஆட்சிக் கட்டிலில் ஏறி அமர்ந்தபோது, யாரை உளமார எண்ணி உணர்ச்சி வயப் பட்டாரோ, அவர் சென்னையில் இல்லை! திருச்சியிலிருக் கிறார் தந்தை பெரியார் என்று தெரிந்ததும், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் கருணாநிதி ஆகிய அமைச்சர் களோடும், வெற்றி வாய்ப்பிழந்த அன்பில் தர்மலிங்கத் தோடும், இரவோடிரவாகப் புறப்பட்டுத். திருச்சி சேர்ந்தார். செழியன் போன்றார் தடுத்த போது, என்னை நாட்டுக்கு அறிமுகப் படுத்தியவர் அவரே. முதலமைச்சராகி யும் நான் அவரைப் பார்க்காவிட்டால், மனிதப் பண்பே ஆகாது என்று கூறினார் அண்ணா. பெரியாரின் வரலாற்றில் இதுதானே பெரிய வெற்றி அவர் வளர்த்த பிள்ளைகள், அவரிடம் நேரிடையாகப் பயிற்சி பெற்ற தொண்டர்கள், இன்று தமிழகத்தின்
பக்கம்:தந்தை பெரியார்.pdf/500
தோற்றம்