உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தந்தை பெரியார்.pdf/505

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

474 மரியாதை எவ்வளவு? தோழர்களே மனதை விட்டுவிடாமல், உறுதியான மனத்தைக்கொண்டு எதையும் சிந்தியுங்கள்!' அடுத்த நாளே, அதிகநாள் தாமதிக்க மனம் பொறுக் காமல், பெரியார், மந்திரிகளுக்குச் சில அறிவுரைகள், உடனடித் தேவையாகத் தர ஆரம்பித்துவிட்டார் தேர்தல் காலத்தில் எப்படி எப்படியோ வாக்குறுதிகள் தரலாம். அதற்காக ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னரும், அவசரமாக எதையும்சொல்லிவிடக்கூடாது.அரிசிப் பஞ்சமும் ஒருகாரண மாகி, இவர்கள் ஆட்சிக்கு வந்திருந்தாலும், அது ஒரு பல மான காரணமல்ல. அதற்கு இவர்களால் என்ன பரிகாரம் காண முடியும்? தலையை மொட்டையடிப்பதால் ஆள்பாரம் குறைந்து விடுமா?’ என்று கேட்டார் பெரியார். அரிசியை வெளி மாகாணங்களுக்குச் செல்லவொட்டாமல் தடுப்பது, லெவி கொள்முதல் முறையைச் சீர்திருத்துவது, குறைந்த நிலமுள்ளவர்களுக்குக் கிஸ்தியில்லாமல் செய்வது, பஸ் கட்டணம் குறைப்பது போன்றவைகளைச் செய்வது தேவையேயில்லை. அப்படிச் செய்வதானாலும் நிதானமாக, ஆழ்ந்து யோசித்துச் செய்ய வேண்டும். அரிசி நிலவரி முதலிய பிரச்சினைகள் இயற்கைப் பிரச் சினைகளல்ல; செயற்கைப் பிரச்சினைகள். அதனால் இவற்றை நம்பியே வெற்றியைக் கணித்துக் கொள்ளக் கூடாது. உத்தியோகம், பதவிகள் அளிப்பதில் பக்தவத்ச லத்தை முன் மாதிரியாகக் கொள்ளக்கூடாது; இனநலம் மறக்கக்கூடாது.” - - இன்றைக்குத் தங்களுக்கு வரும் கூட்டத்தையும் ஆர வாரத்தையும் நம்பி, மந்திரிகள் ஏமாந்து விடக்கூடாது. என்றார் பெரியார். விபூதி வீரமுத்துவுக்கு ஒரு காலத்தில் இருந்த பெருமை என்ன? இன்றைக்கு ஒரு கிருபர்னந்த வாரியார் சுவாமிக்கோ, சங்கராச்சாரிய சுவாமிக்கோ இருக் கிற பெருமை என்ன? இதெல்லாம் நிலையானதா என யோசிக்க வேண்டும். சிபாரிசுகள், இலஞ்சங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாயிருக்க வேண்டும். எதுவாயிருந்தாலும் மந்திரிகள் தாங்கள் நேர்மையாக நடந்து கொள்வதாகவும்,